தி.மு.க.வினரின் தொடர் தாக்குதல்: கதி கலங்கி நிற்கும் தமிழக காவல்துறை!

தி.மு.க.வினரின் தொடர் தாக்குதல்: கதி கலங்கி நிற்கும் தமிழக காவல்துறை!

Share it if you like it

திராவிடர் முன்னேற்ற கழகம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்த பின்பு, அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தமிழக காவல்துறையினரை தொடர்ந்து மோசமான முறையில் அவமதிக்கும் சம்பவங்கள். தொடர் கதையாக மாறி வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கோவத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் சட்டம், ஒழுங்கு மிகச் சிறப்பாக இருக்கும். யார் தவறு செய்தாலும், அவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுப்பேன். எனது கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட கடும் நடவடிக்கை உண்டு. என தேர்தல் சமயத்தில் தி.மு.க. தலைவர், ஸ்டாலின் மக்களுக்கு வாக்குறுதி அளித்து இருந்தார். அதேசமயம், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினோ, எங்கள் ஆட்சிக்கு இன்னும் 5 மாதங்கள் தான் இருக்கிறது. நாங்கள் பார்க்காத காவல்துறையா? என்று மிரட்டல் விடுத்த காணொளியை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும்.

அந்த வகையில், தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கும் வந்துவிட்டது. இதன் பிறகு, சட்டம், ஒழுங்கு தமிழகத்தில் எவ்வாறு உள்ளது. என்பதை தமிழக மக்கள் தற்பொழுது நன்கு உணர்ந்து உள்ளனர். இப்படி, சட்டம், ஒழுங்கு மோசமாகி வருவதை கூட கவனிக்காமல். தமிழக முதல்வர் மற்றும் டி.ஜி.பிக்கு அப்படி என்ன வேலை உள்ளது. என பலர் கேள்வி எழுப்பும் நிலையே, தொடர் கதையாக இருந்து வருகிறது. இதையடுத்து, தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் கட்டுபாட்டில் இல்லை. மக்களுக்கு போதிய பாதுகாப்பை, தமிழக அரசால் வழங்க முடியவில்லை. என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆளும் கட்சி மீது குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார். அதனை மெய்ப்பிக்கும் விதமாக, பொதுமக்கள் மட்டுமில்லாமல், காவல்துறையினருக்கும் உரிய மரியாதை கிடைக்காத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்ற தொகுதியில். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்து. கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டவர், தி.மு.க-வை சேர்ந்த தென்னலூர் பழனியப்பன். இது தான் தனக்கு கடைசி தேர்தல். கடந்த 30 ஆண்டு காலம் அரசியலில் இருந்து மக்களுக்காக உழைத்து உள்ளேன். இந்த ஒரு முறை மட்டும் எனக்கு வாய்ப்பு தாருங்கள் என்று விம்மி, விம்மி, அழுதவர். இவர் தான், காவலர்களை ஆபாசமாக திட்டிய காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்படியாக, தமிழக காவல்துறையினர் தொடர்ந்து, ஆளும் கட்சியை சேர்ந்தவர்களால். மோசமாக நடத்தப்படும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கோவத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

/

Share it if you like it