தமிழகத்தில் பாஜகவினர் தொடர்ந்து அச்சுறுத்தப்படுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பாஜகவினர் படுகொலை செய்யப்பட்டது. தொடர்ச்சியாக மாநில ஆளுநரின் மீதும் நடக்கும் அச்சுறுத்தல்கள் மாநில முழுவதும் தமிழக பாஜக நிர்வாகிகள் மீது போடப்படும் பொய் வழக்குகள் குற்றச்சாட்டு கைது அலைக்கழிப்புகள் இவற்றையெல்லாம் மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் தேசிய பாஜகவின் தலைவரின் கவனத்திற்கு தமிழக பாஜக தலைவர் கொண்டு போய் சேர்த்தார். அதன் காரணமாக தேசிய பாஜக தலைமை மாநிலங்களில் இருக்கும் நான்கு முக்கிய பாஜக நிர்வாகிகளை கட்டமைத்து ஒரு உண்மை அறியும் குழுவை உயர்மட்ட குழுவாக தமிழகத்திற்கு விசாரணைக்கு அனுப்பி வைத்தது.
இந்த விசாரணை குழு தமிழகத்திற்கு வந்து மாநிலம் முழுவதும் பல்வேறு நிர்வாகிகளை நேரில் சந்தித்து உண்மை நிலையை கேட்டு அறிந்தது. தமிழக பாஜகவின் தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளுக்கே போய் அங்கு இருந்த சூழலை நேரடியாக விசாரித்து அறிந்தார்கள். இதன் பின்னணியில் தமிழக அரசு எந்திரத்தை ஆளும் திமுக கட்சி முழுமையாக துஷ்பிரயோகம் செய்வது அம்பலமாகிறது. அதன் மூலம் பாஜகவின் வளர்ச்சியை தடுக்க வேண்டும் முடக்க வேண்டும் திமுகவின் அதிகாரத்தை அராஜகத்தை தொடர்ந்து நிலை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டு செயல்படுவது அம்பலம் ஆகிறது.
திமுகவின் அராஜகத்திற்கும் அதிகார கொள்ளைக்கும் பெரும் இடையூறாக இருக்கும் தமிழக பாஜகவின் தலைவர் அவருக்கு துணையாக இருக்கும் தமிழக பாஜகவின் நிர்வாகிகள் என்று ஒட்டுமொத்தமாக அனைவரையும் தமிழக காவல்துறை அரசு எந்திரங்களை பயன்படுத்தி முழுவதுமாக முடக்க பார்ப்பது அம்பலமாகிறது. குறிப்பாக சில தினங்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டத்தில் கல்குவாரி ஏலத்தில் கேட்பதற்காக ஒப்பந்த புள்ளி வழங்க வந்த மாவட்ட பாஜக நிர்வாகிகள் அங்கிருந்த திமுகவினர்கள் கடுமையாக தாக்கப்பட்டதும் அது மாவட்ட ஆட்சியர் எஸ்பி உள்ளிட்டவர்கள் மீது நடந்தேறியதும் கடும் அதிர்ச்சி அளித்தது. அவ்வகையில் திமுகவினர் மாநிலம் முழுவதும் வெறிகொண்டு அதிகார கொள்ளையில் ஈடுபட முயல்வதும் அதற்கு தடையாக இருப்பவர்கள் மீது எல்லாம் கொலை வெறி தாக்குதல் நடத்த தயாராவதும் கண்கூடாக தெரிகிறது.
இதையெல்லாம் கண்டிக்க வேண்டிய மாநில முதல்வர் உள்துறையை தனது கைகளில் வைத்துக்கொண்டு அதன் மூலம் காவல்துறையை துஷ்பிரயோகம் செய்து தமிழக பாஜக தலைவரையும் அதன் முக்கிய நிர்வாகிகளையும் அச்சுறுத்துவதையே முழு நேர தொழிலாக கொண்டிருப்பதும் அம்பலமாகிறது.
இதில் உயர் மட்டக் குழுவில் முக்கிய நபராக பயணித்து தமிழகம் முழுவதிலும் பாஜக நிர்வாகிகளை நேரில் சந்தித்து விவரம் கேட்டு அறிந்த ஆந்திர மாநில பாஜக தலைவர் திருமதி புரந்தரேஸ்வரி தமிழகத்தில் பாஜக தொண்டர்கள் நிர்வாகிகள் மீது திமுக அரசு தொடர்ச்சியான அராஜகத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழக பாஜகவினர் மீது திமுக அரசு காவல்துறையை துஷ்பிரயோகம் செய்த 409 வழக்குகளை பதிவு செய்திருப்பதாக அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். தமிழக முதல்வர் பொறுப்பில் இருக்கும் ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வர் போல செயல்படாமல் திமுகவினருக்கு மட்டுமான முதல்வராக செயல்படுகிறார் என்று அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இதன் மூலம் கடந்த காலங்களில் திமுகவும் அதன் தலைமை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் நேரடியாக அரசு இயந்திரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக தமிழக பாஜகவினர் வைத்த குற்றச்சாட்டு உண்மையாக நிரூபணம் ஆகி உள்ளது. மேலும் தமிழகத்தில் இருக்கும் எதுவும் யாரும் திமுக விற்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும். எதிர்த்து நின்றால் இங்கு வாழ முடியாது என்ற அச்சுறுத்தலை அரசு எந்திரத்தின் மூலம் திமுகவும் அதன் தலைமையும் நிலைநிறுத்தம் முயல்வதும் அம்பலமாகிறது. அந்த வகையில் திமுகவின் இந்த இரண்டு ஆண்டுகளில் தங்களுக்கு கட்சி அரசியல் ரீதியாக சித்தாந்த ரீதியாக எதிர்க்கும் பாஜக மற்றும் அதன் தொண்டர்கள் நிர்வாகிகளை முடக்குவதற்கு தமிழக அரசு எந்திரத்தை எல்லா வழியிலும் திமுக துஷ்பிரயோகம் செய்வது தெரிகிறது.
கடந்த காலங்களில் திமுக வளரும் காலத்தில் காங்கிரஸிடமிருந்து எப்படிப்பட்ட அராஜகங்களை அடக்குமுறைகளை எல்லாம் திமுக எதிர்கொண்டதோ ? அது அத்தனையையும் திமுக என்று தமிழக பாஜகவின் மேல் ஏவி விட்டு வருகிறது. தங்களுக்கு பிரச்சனை இடையூறு என்று வரும் போதெல்லாம் ஜனநாயகம் கருத்து சுதந்திரம் என்று முகமூடி அணிந்து கொள்ளும் திமுக இன்று அதே ஜனநாயகம் கருத்து சுதந்திரம் கட்சி அரசியல் பரவலாக்கும் அனைத்தையும் தூக்கி எறிந்து விடும்.கடந்து தமிழகம் என்றால் திமுக என்றால் தமிழகம் என்ற அளவில் தமிழகத்திலிருந்து தங்களுக்கு சற்றும் பொருந்தாத பாஜகவையும் அதன் ஆதரவு நிலைப்பாட்டையும் அச்சுறுத்தலின் மூலம் தடுத்து நிறுத்தி விட முடியும் என்றும் மனக்கோட்டை கட்டி களம் இறங்கி இருக்கிறது. ஆனால் திமுகவின் நாளுக்கு நாள் பெருகிவரும் அது அராஜகமும் அதிகார துஷ்பிரயோகமும் திமுக கட்சிக்காரர்களின் ரவுடித்தனமும் தான் அச்சத்திலும் அதிருப்தியிலும் இருக்கும் மக்களை தமிழக பாஜகவிற்கு ஆதரவாக மாற்றத் தொடங்கி இருக்கிறது என்ற உண்மையை இன்னும் திமுகவின் தலைவை உணர்ந்ததாக தெரியவில்லை.
தமிழக பாஜக சாதாரண வளர்ச்சியில் தான் இருந்தது . அதை அசுர வளர்ச்சிக்கு கொண்டு போய் சேர்த்ததே திமுகவின் அடக்குமுறையும் அராஜகமும் மட்டுமே என்பதை அவர்கள் இன்னமும் உணர்ந்ததாக தெரியவில்லை. மாறாக அச்சுறுத்தினால் தமிழக பாஜக தலைவர் அடங்கி விடுவார், வழக்குகள் கைதுகள் என்று அலை கடித்தால் முக்கிய நிர்வாகிகள் எல்லாம் முடங்கி விடுவார்கள். அதன் மூலம் தமிழக பாஜகவை கட்டி வைத்து விடலாம். என்ற குறுகிய வட்டத்திலேயே இன்னும் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழக பாஜக என்பது திமுக அதிமுக போல கைத்தட்டலிலும் உற்சாகத்திலும் அடுத்தடுத்து வெற்றிலும் வளர்ந்து வந்த கட்சி இல்லை. தாய் தேசம் முழுவதிலும் கடுமையான எதிர்ப்புகள் அடக்குமுறைகள் கொடூரமான கொலை வெறி தாக்குதல்கள் சந்தித்து வளர்ந்த கட்சி. தனது தேசிய தலைமையின் இரண்டாவது தலைவரையே கொடூரமாக பலிதானம் கொடுத்த கட்சி.
பல ஆயிரக்கணக்கான கட்சியின் தொண்டர்கள் அவர்களின் குடும்பங்கள் வலி தானிகளாக்கப்பட்டு அவர்களின் கண்ணீரிலும் உதிரத்திலும் வளர்ந்து வந்த கட்சி. தமிழக பாஜகவின் தலைவரும் அதன் முக்கிய நிர்வாகிகளும் எதற்கும் தயார் என்று வரிந்து கட்டி நிற்கிறார்கள். திமுகவின் அராஜகம் அச்சுறுத்தும் வழக்கு முயற்சிகள் அத்தனையும் தமிழக பாஜகவின் வளர்ச்சிக்கும் தொண்டர்களின் உற்சாகத்திற்கும் இன்னும் உத்வேகத்தை கொடுக்கும். அவ்வகையில் திமுகவின் முடிவுகள் நடவடிக்கைகள் எல்லாமே பாஜகவின் வளர்ச்சிக்கு நேரடி பங்களிப்பை வழங்குவது தான் என்று அரசியல் விமர்சகர்களின் கருத்து. கடந்த கால தமிழக அரசியலில் சாட்சியங்கள் எல்லாம் இன்று திமுக அதன் இறுதி அத்தியாயத்தில் இருப்பதும் பாஜக விஸ்வரூப வளர்ச்சியை எடுத்து வருவதையும் உறுதிப்படுத்துகிறது.