சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்து பல பொது இடங்களிலும், தெருக்களிலும், மழைநீர் தேங்கி நின்றதால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர். இதனை தொடர்ந்து மாநராட்சியும் துரிதமாக பணிகள் செய்து ஆங்காங்கே மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் தேங்கிய பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்,மேயர் பிரியா. ஆனால் சில இடங்களில் மழைநீர் தேங்கியபடியே உள்ளதாகவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் மேயர் பிரியா பேசும் மொழியை வைத்து வெள்ளம் NOT வெல்லம் இவ்வாறு நெட்டிசன் ஒருவர் பதிவிட்டிருந்தார். இதற்கு திமுகவை சேர்ந்த சூர்யா என்பவர் அவருடைய Surya Born To Win என்கிற ஐடியில் இருந்து சமூக வலைதள பக்கத்தில் பிராமணர்களை மிக கொச்சையாக வசை சொற்களால் பதிவிட்டுள்ளார். இதற்கு பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இவ்வாறு கொச்சையாக அருவருக்கத்தக்க வகையில் பேசிய இந்த நபரை கைது செய்ய உத்தரவிடுவாரா எல்லோருக்குமான முதலமைச்சர் என்று சொல்கிற தி மு க தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள்?
