கோவில் நிலத்தை ஆட்டையை போடுவது வேலையா போச்சு.

கோவில் நிலத்தை ஆட்டையை போடுவது வேலையா போச்சு.

Share it if you like it

இந்து முன்னணி கொடுத்த புகார் அடிப்படையில், சென்னை புதுப்பேட்டையில் உள்ள கோமளிஸ்வரன் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்லாயிர கணக்கான கோவில்கள் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கின்ற பல கோயில்களின் சொத்துக்களுக்கு முழுமையான விவரங்கள் சரியானபடி பராமரிக்கப்படுவதில்லை என்பதே நிதர்சனம். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, ஆட்சியாளர்களின் துணையுடன் சமூக விரோதிகள் கோயில் நிலங்களை தொடர்ந்து ஆக்கிரமிப்பது, போலியாக பட்டா போட்டு விற்பது போன்ற வேலைகளில் இன்று வரை ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், திருவல்லிக்கேணி பார்பர்ஸ் பிரிட்ஜ் சாலை, 2-வது சந்தில், கோவிலுக்கு சொந்தமான குடியிருப்பில் மகமது காசீம் வாடகைக்கு இருந்துள்ளார். சொந்த வீடு போல் வாழ்ந்த அவர் தன் நண்பர் மூலம் அந்த வீட்டை விற்க முடிவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து, ஓ.எல்.எக்ஸில் 30 லட்ச ரூபாய்க்கு கோவில் சொத்தை ஏலம் விட முயன்ற சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதே போல, நாகை மாவட்டம் கீழையூர் தி.மு.க ஒன்றிய செயலாளரான தாமஸ் ஆல்வா எடிசன், அப்பகுதியில் உள்ள ராஜதகிரீஸ்வரர் கோவில் நிலங்களை போலி ஆவணங்களை காட்டி அபகரிக்க முயன்ற சம்பவம் ஹிந்துக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்து. இப்படியாக, ஹிந்து ஆலயங்களின் நிலங்கள், சொத்துக்கள் சமூக விரோதிகளால் தொடர்ந்து கபளீகரம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை புதுப்பேட்டையில் புகழ் பெற்ற கோமளிஸ்வரன் சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, சொந்தமான இடத்தை ”அப்துல் கரீம் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து, எம்.கே. ஆட்டோ மொபைல்ஸ் கடையை நடத்தி வந்துள்ளார். மேலும், யாருடைய அனுமதியையும் பெறாமல் “ஆல்ட்ரேசன்” செய்ய முயன்றுள்ளார். இதனை தடுத்து நிறுத்த வேண்டிய கோயில் நிர்வாகம் வழக்கம் போல குறட்டை விட்டு கொண்டு இருந்தது. விஷயம் அறிந்து களத்தில் இறங்கிய இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் காவல்துறையில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் அப்துல் கரீம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, அக்கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களால் மீட்டெடுக்கப்பட்ட கோவில் சொத்துகளை, தான் மீட்டு தந்ததாக மார்தட்டிக் கொள்ளும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு. இது குறித்து வாய் திறப்பாரா? என குறிபிடத்தக்கது.


Share it if you like it