திமுகவின் மகளிர் உரிமை மாநாடு – பிண்ணனியில் இருக்கும் I.N.D.I.A கூட்டணி அரசியல் கணக்குகள்

திமுகவின் மகளிர் உரிமை மாநாடு – பிண்ணனியில் இருக்கும் I.N.D.I.A கூட்டணி அரசியல் கணக்குகள்

Share it if you like it

கடந்த வார இறுதியில் சென்னையில் திமுக மகளிர் அணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு நடத்தப்பட்டது. இதை திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி தனது அரசியல் செல்வாக்கை தக்க வைக்கவும் திமுக மகளிர் உரிமை பாதுகாக்கும் கட்சி என்ற கருத்தியலை நிலை நிறுத்தும் வகையிலும் திட்டமிட்டு நடத்தியதாக கூறப்படுகிறது. சமீபத்தில் மகளிருக்கு அனைத்து துறையிலும் 33 சதம் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றிய நிலையில் பாஜகவிற்கு எதிர் வரும் தேர்தலில் அது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுத் தரலாம். பத்து ஆண்டுகள் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்த காங்கிரசு திமுக ஆட்சியில் இந்த மகளீர் மசோதா நிறைவேற்றப்படவில்லை. ஆனால் இன்று பாஜக காலத்தில் இது சாத்தியமாகிறது என்ற வகையில் இது எதிர் தரப்பில் இருக்கும் ஐஎன்டிஐஏ கூட்டணிக்கு தேசிய அளவில் ஒரு பெரும் பின்னடைவை கொடுக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.

இதை சமன் செய்யும் வகையில் பாஜகவிற்கு எதிராக விமர்சனம் செய்யவும் மகளிர் உரிமை விவகாரத்தில் தங்களது கூட்டணியை சார்ந்த கட்சிகள் உண்மையில் மகளிர் உரிமை பாதுகாப்பு விஷயங்களில் அக்கறை செலுத்துவதாக மக்களிடம் நிலை நிறுத்தவும் இந்த அரசியல் மாநாடு ஐஎன்டிஐஏ கூட்டணிக்கு ஆதரவாக இந்த மாநாடை கனிமொழி தரப்பு முன்னெடுத்ததாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இரண்டு கூட்டணி கூட்டங்கள் ஐஎன்டிஐஏ கூட்டணி கட்சிகள் சார்பில் நடந்தது . கூட்டணி கட்சிகள் மத்தியில் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்த நிலையில் வேறு வழியின்றி மத்திய பிரதேசம் போபாலில் நடக்க இருந்த ஐஎன்டிஐஏ கூட்டணியின் மூன்றாவது கூட்டம் ரத்து செய்யப்பட்டு மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.இந்த மகளீர் மாநாடு மூலம் சுணங்கி இருக்கும் கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைத்நு அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகும் வாய்ப்பாக இருக்கும். அதை தான் செய்து முடிக்கும் பட்சத்தில் திமுக கட்சியில் மற்றும் ஐஎன்டிஐஏ கூட்டணியில் அது தன் செல்வாக்கை உயர்த்தும் என்ற அரசியல் கணக்குகள் இருந்திருக்கலாம்.

தமிழகத்தில் இருக்கும் பிரதான கட்சியான திமுக ஐஎன்டிஐஏ கூட்டணியின் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது ‌ இது நீண்ட காலமாக காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருக்கும் ஒரு நெருக்கமான கூட்டணி கட்சி ஆகும். சமீப காலமாக திமுகவினர் தொடர்ச்சியாக சனாதன விரோதமாக பேசி வருவதும் சனாதன ஒழிப்பு மாநாடு என்ற ஒன்றை முன் நின்று நடத்தி அதில் திமுகவின் தலைமை குடும்ப வாரிசான உதயநிதியும் இந்து அறநிலையத்துறை அமைச்சரும் கலந்துகொண்டு சனாதன தர்மத்துக்கு எதிராக பேசியதையும் மத்திய உள்துறை அமைச்சர் பிரதமர் உள்ளிட்டவர்கள் நாடு முழுவதும் கொண்டு போய் சேர்த்திருந்தார்கள். இதன் காரணமாக வட மாநிலங்களில் ஐஎன்டிஐஏ கூட்டணி கட்சியின் இருக்கும் கட்சிகளே திமுக விற்கும் அவர்களின் சனாதன விரோத அரசியலுக்கும் கடும் எதிர்ப்புகள் விமர்சனங்கள் கண்டனங்கள் எழுந்தது. ஆங்காங்கே திமுகவின் சனாதன விரோத அரசியலுக்கு எதிராக போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அதில் ஐஎன்டிஐஏ கூட்டணியை சார்ந்த கட்சித் தலைவர்கள் பங்கேற்று நாங்கள் திமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் அவர்களின் சனாதன விரோதத்தில் எங்களுக்கு தொடர்பில்லை. நாங்கள் சனாதன தர்மத்திற்கு எதிரானவர்கள் இல்லை என்று தன்னிலை விளக்கம் கொடுக்கும் அளவிற்கு நிலைமை மோசமானது.

காங்கிரஸின் தலைமை குடும்பமும் ஐஎன்டிஐஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் பல்வேறு கட்சிகளும் திமுகவின் மீதும் ஸ்டாலின் குடும்பத்தின் மீதும் தனிப்பட்ட முறையில் அதிருப்தியும் அவநம்பிக்கையும் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திமுகவில் இருக்கும் உட்கட்சி நெருக்கடி குடும்ப பூசல் இவற்றையெல்லாம் முன்னிறுத்தி கட்சியில் நெருக்கடி எழும் பட்சத்தில் அதை முன்னிறுத்தி திமுகவை ஐஎன்டிஐஏ கூட்டணியில் இருந்து வெளியேற்றவும் காங்கிரஸிலிருந்து ஒரு தரப்பு வேலை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஐஎன்டிஐஏ கூட்டணியில் இருந்து திமுக வெளியேறும் பட்சத்தில் அந்த இடத்தை நிரப்பி கூட்டணியில் இணைந்து கொள்ள அதிமுக தயாராக இருப்பதாகவும் அரசியல் விமர்சனங்கள் இருக்கிறது. சிறுபான்மை வாக்கு என்ற காரணம் காட்டி பாஜகவுடன் தொடர்ச்சியான மோதலில் ஈடுபட்டு கூட்டணியில் இருந்து வெளிவந்ததன் பின்னணியில் அதிமுக காங்கிரஸ் கூட்டணியும் ஐஎன்டிஐஏ கூட்டணியில் திமுகவிற்கு பதிலாக அதிமுகவை இணைப்பதற்கான ஒரு முயற்சியும் நடந்து வருவதாக பல மாதங்களாக பேச்சு அடிபட்டு வருகிறது.

இந்நிலையில் அதிமுக பாஜக இடையே கூட்டணி முறிவு அதன் காரணமாக அதிமுகவிற்கு இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் ஒரு பக்கம். மறுபக்கம் திமுகவின் சனாதன ஒழிப்பு மாநாடு விவகாரம் தேசிய அளவில் கடும் எதிர்ப்புகளை பெற்று அதன் காரணமாக ஐஎன்டிஐஏ கூட்டணியின் கட்சி தலைவர்களும் அதன் முக்கிய தலைவர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் பலரும் ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இதை பயன்படுத்தி கட்சியில் தனது செல்வாக்கை வலுவாக்கிக் கொள்ளவும் எதிர்காலத்தில் ஏதேனும் தனக்கு சிக்கல் நேரும் பட்சத்தில் கட்சியில் தனக்கென்று ஒரு பெரும் ஆதரவு வட்டத்தை உருவாக்கிக் கொள்ளவும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டிருக்கலாம். கனிமொழிக்கு மகளிர் மசோதா நல்வாய்ப்பாக அமைய அதையே பயன்படுத்தி மகளிர் உரிமை மாநாடு என்ற பெயரில் ஒரு அரசியல் மாநாட்டை நடத்தியதாக தெரிகிறது.

இந்த மாநாட்டின் மூலம் திமுகவில் தனக்கு இருக்கும் ஆளுமை கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் இடையே தனக்கு இருக்கும் செல்வாக்கு இவற்றை கட்சியின் தலைமை குடும்பத்திற்கும் காங்கிரஸ் கட்சியின் தலைமை குடும்பத்திற்கும் தெரிவிப்பதற்கு ஒரு நல் வாய்ப்பாக அவர் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். மறுபக்கம் தேசிய அளவில் பாஜக மகளிர் மசோதாவை முன்னிறுத்தி ஆதரவை பெருக்கிக் கொள்ள முயற்சிக்கும் போது மகளிர் உரிமை பாதுகாப்பு மாநாடு என்ற பெயரில் ஒரு மாநாட்டை முன்னெடுத்து அதன் மூலம் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தான் மகளிர் உரிமையில் பாதுகாப்பில் நலன் அக்கறையில் முன்னேற்பதாக ஒரு கருத்துகளை உருவாக்கி பாஜகவிற்கு பெருகிவரும் ஆதரவு அழகி தடுத்து அதை ஐஎன்டிஐஏ கூட்டணிக்கான ஆதரவாக மாற்ற இருக்கும் அரசியல் வியூகமாகவும் இது பார்க்கப்படுகிறது.


Share it if you like it