இனி ஈரானுக்கு செல்ல விசா வேண்டாம் – ஈரான் அரசு!

இனி ஈரானுக்கு செல்ல விசா வேண்டாம் – ஈரான் அரசு!

Share it if you like it

உலக நாடுகள் அடுத்தடுத்து இந்தியா உடனான உறவை மேம்படுத்தவும், இந்தியா உடனான வர்த்தகத்தை மேம்படுத்தவும், இந்தியர்களைச் சுற்றுலாப் பயணியாக ஈர்க்கவும் விசா பெற வேண்டிய கட்டாயத்தைத் தளர்த்தி வருகிறது.

இந்தியா மற்றும் வளைகுடா நாடுகள் உட்படச் சுமார் 33 நாடுகளின் குடிமக்கள் ஈரான் நாட்டிற்குள் நுழைய விசா தேவையை நீக்குவதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் ஈரான் உலக நாடுகள் உடன் வெளிப்படைத்தன்மை மற்றும் ஈடுபாட்டை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

ஈரான் நாட்டின் பொருளாதாரம் அமெரிக்கா மற்றும் பிற வல்லரசு நாடுகளின் தடையின் காரணமாக முடங்கியிருக்கும் வேளையில், உலக நாடுகள் உடனான தொடர்பு இல்லாமல் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் சர்வதேச அடிப்படையில் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கில் ஈரான் அரசு, 33 நாடுகளின் மக்களுக்கு விசா தேவையை தளர்த்தியுள்ளது.

இப்புதிய அறிவிப்பு மூலம் ஈரான் அரசு சுமார் 45 நாடுகளில் இருந்து மக்களை விசா இல்லாமல் ஏற்றுக்கொள்கிறது. சுற்றுலாப் பயணிகள் வருகையை ஈர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று ஈரானிய கலாச்சாரப் பாரம்பரியம், சுற்றுலா மற்றும் கைவினைப்பொருட்கள் அமைச்சர் எஸதுல்லாஹ் ஜர்காமி தெரிவித்துள்ளார்.


Share it if you like it