மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் 1000க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அவ்வப்போது பராமரிப்பில்லாத மிகவும் தரக்குறைவான அரசு பேருந்துகளின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தநிலையில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து சென்ற அரசு பேருந்து ஒன்று அதிகளவு புகையை வெளியேற்றியபடி சென்றதை சாலையில் சென்ற வாகன ஓட்டி ஒருவர் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.
மாநகராட்சியில் கொசு மருந்து அடிப்பது போல அரசு பேருந்து இயக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் இன்று சென்னையில் திமுக அமைச்சர் உதயநிதி தலைமையில் பார்முலா கார் பந்தயம் நடக்கப்போகிறது. அரசு பேருந்தை சீரமைக்க துப்பில்லாத திமுக அரசுக்கு கார் பந்தயம் தேவையா ? என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.