திராவிட மாடல் நாத்திக அரசுக்கு தெரியுமா ? தமிழர்களின் பண்பாடு என்கின்ற கற்பூர வாசனை !

திராவிட மாடல் நாத்திக அரசுக்கு தெரியுமா ? தமிழர்களின் பண்பாடு என்கின்ற கற்பூர வாசனை !

Share it if you like it

சாலை விரிவாக்கத்துக்காக மதுரையில் 125 ஆண்டுகள் பழமையான மேலமடை சாவடி கட்டிடம் இடிக்கப்பட்டது. பல்வேறு தரப்பு மக்களின் 120 ஆண்டு கால நினைவுகளை தாங்கி நிற்கும் மேலமடை சாவடி கட்டிடத்தை இடிப்பது பண்பாட்டு தலைநகரமான மதுரைக்கு அழகல்ல என்று இயற்கை பண்பாட்டு மையமும், சூழலியல் ஆர்வலர்களும் அதிருப்தியடைந்துள்ளனர். இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில்,

திராவிட மாடல் நாத்திக அரசுக்கு தெரியுமா?
தமிழர்களின் வாழ்வியல் பண்பாடு என்கின்ற கற்பூர வாசனை!

120 ஆண்டுகால மேலமடை சாவடி இடித்து தள்ளப்பட்டுள்ளது. நூற்றாண்டு கால பாரம்பரிய சின்னங்களை அழிக்கக்கூடாது என்கின்ற விதி நடைமுறையில் இருக்க, சேதுபதி ராஜா காலத்து மண்டபத்தை தற்போதைய நாத்திக அரசு இடித்து தள்ளிய சம்பவம் ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை இடித்ததற்கு சமமாகும்.

இந்த மண்டபம் பொது மக்களுக்கு பெரிதும் பயன்பட்டு வந்துள்ளது. அழகர் ஆற்றில் இறங்கும் மிகப்பெரிய திருவிழாவிற்கு இந்த மண்டபமும் ஒரு சாட்சியாகும்.

மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மஹால் உள்ளிட்டவை மதுரையின் வரலாற்று சின்னம் என்றால், மேலமடை சாவடியும், புளியமரத்து பெருமாள் கோயிலும், படித்துறை ஆலமரமும் மேலமடையின் வரலாற்று அடையாளங்கள் இல்லையா? என்று மதுரை மக்களும் பண்பாட்டு ஆதரவாளர்களும் இந்த இந்து சமய பண்பாட்டை அழிக்க நினைக்கும் நாத்திக அரசை கேள்வி கேட்கிறார்கள். இதுபோன்று தொடர்ந்து பாரம்பரியத்தை பழங்கால சின்னத்தை சட்டத்தை மீறி அழிக்க நினைத்தால் இந்து முன்னணி மூலம் சட்டப்படி இந்த அரசின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *