சட்டத்தை மீறி சாலையில் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் வைக்கப்பட்டுள்ள திமுகவின் பேனர், கொடிகளை கூட அகற்ற திராணி இல்லையா ? என்று அறப்போர் இயக்கம் தமிழக காவல்துறையை விமர்சித்து உள்ளது. இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் எக்ஸ் பதிவில்,
சாலைகளில் பேனர் வைப்பது, கொடி கட்டுவது, அலங்கார வளைவுகள் அமைப்பது போன்ற செயல்கள் விபத்துக்களை ஏற்படுத்தும் அபாயம் கொண்டவை என்று மற்ற கட்சிகளை எச்சரிக்கும் தமிழக காவல்துறை, அந்த ஆபத்தான சட்ட மீறலை திமுக செய்யும் போது எங்கே பூ பறிக்க போயிருக்கிறது?
IPS எல்லாம் படித்து முடித்து விரைப்பாக வேலைக்கு வந்த நீங்கள், சட்டத்தை மீறி சாலையில் வைக்கப்படும் பேனர், கொடிகளை கூட அகற்ற திராணி இல்லாமல் இருக்கிறீர்களே உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா?
பொது மக்களுக்கு ஆபத்து என்று தெரிந்தும் இப்படி சாலைகளில் சுய விளம்பரம் தேடும் அரசியல் கட்சி தலைவர்கள் மக்கள் நலனில் எப்படி அக்கறை காட்டுவார்கள்? சட்டத்தை காக்க வேண்டிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ள ஆளுங்கட்சியே இந்த சமூக விரோத செயலில் ஈடுபட்டு விட்டு, அந்த கட்சியை கேப்பியா ஆப்பிரிக்காவுக்கு போவியா என்று கூச்சல் போட்டு தங்கள் தவறை மறைக்க மட்டும் கூட்டமாக வந்து கோஷம் போடுகிறார்கள். இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.