இனியும் தாமதம் வேண்டாம் : விரைந்து செயல்பட்டு மீட்டுங்கள் – முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் !

இனியும் தாமதம் வேண்டாம் : விரைந்து செயல்பட்டு மீட்டுங்கள் – முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் !

Share it if you like it

தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இருந்து, அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட, 1,411 சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அதில், தமிழக கோவில்களில் இருந்து கடத்தப்பட்ட, 15க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளதாகவும் ஓய்வுபெற்ற, ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஓய்வுபெற்ற, ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறியதாவது :-

தமிழகத்தில் இருந்து, 2,900 கோவில் சிலைகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்பட்டு உள்ளன. இரு நாடுகளின் விவகாரம் என்பதால், இந்த சிலைகளை மீட்பது எளிதல்ல.

இந்திய தொல்லியல் துறை வாயிலாக, தகுந்த ஆதாரங்களுடன், கடத்தப்பட்ட சிலைகள் எங்கள் நாட்டை சேர்ந்தவை தான் என்பதை நிரூபித்தால் மட்டுமே மீட்க முடியும். தொடர் முயற்சி இருந்தால் தான் அது சாத்தியம்.

அந்த வகையில், தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இருந்து, அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட, 1,411 சிலைகள் மீட்கப்பட்டன. அதில், தமிழக கோவில்களில் இருந்து கடத்தப்பட்ட, 15க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன.

இந்த சிலைகளை, அமெரிக்க அரசு அங்குள்ள நம் நாட்டு துாதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டது.

ஆனால், அந்த சிலைகள் உரிய கோவில்களுக்கு எடுத்து வரப்படாமல் அங்கேயே தேங்கி கிடக்கின்றன. இதுகுறித்து, மத்திய மற்றும் மாநில அரசுகள் விரைந்து செயல்பட்டு, சிலைகளை அந்தந்த மாநிலங்களுக்கு எடுத்து வர வேண்டும்.

ஒரு சிலையை மீட்பது எவ்வளது கடினம் என்பது, எனக்கு நன்கு தெரியும். இனியும் தாமதம் கூடாது.

இவ்வாறு கூறினார்.

!


Share it if you like it