தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாததற்கான காரணம் தேடும் வெற்று அறிக்கையே இது – டாக்டர் கிருஷ்ணசாமி பாய்ச்சல்..! 

தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாததற்கான காரணம் தேடும் வெற்று அறிக்கையே இது – டாக்டர் கிருஷ்ணசாமி பாய்ச்சல்..! 

Share it if you like it

தமிழக நிதியமைச்சர் இன்று பத்திரிக்கையாளர்கள் முன்பு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார். தமிழக மக்கள் முன்பே கணித்து இருந்த மாதிரியே முந்தைய அ.தி.மு.க அரசு மீதும், பா.ஜ.க அரசு மீதும் விமர்சனங்களை முன் வைத்து இருந்தார் அமைச்சர்.

இந்நிலையில் புதிய தமிழக கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் தமிழக அரசின் வெள்ளை அறிக்கை குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்து உள்ளார்.

  • திமுக தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாததற்கான காரணம் தேடும் வெற்று அறிக்கையாகவே இன்றைய வெள்ளை அறிக்கை உள்ளது. திமுகவின் பட்ஜெட்டுக்கு முன்பான வெள்ளை அறிக்கை வாண வேடிக்கையாக இருக்கும் என பெரிது எதிர்பார்க்கப்பட்டது; ஆனால் புஷ்வாணமாகி விட்டது.
  • வரி விதிப்பு இல்லாத ஜீரோ பட்ஜெட் இருக்க முடியாது என்று சொல்வதன் மூலம், 13-ஆம் தேதி பட்ஜெட்டில் பெரிய அளவிற்கு வரி விதிப்புக்கள் உண்டு என்பதை சொல்லாமல் சொல்வதாகவே உள்ளது.

 


Share it if you like it