11 மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைக்கும் பிரதமருக்கு மத்திய இணையமைச்சர் எல். முருகன் நன்றி தெரிவித்து உள்ளார்.
தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவரும் தற்பொழுதைய மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு, பால்வளம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சருமான எல்.முருகன் அவர்கள், தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை, ஒரே நேரத்தில் திறந்து வைக்க உள்ள. பாரதப் பிரதமருக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றி தெரிவித்து உள்ளார். இது குறித்த காணொளியை PIB in Tamil Nadu தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.