போதைப்பொருள் விவகாரம் : சிங்கம் பட பாணியில் நடந்த சம்பவம் !

போதைப்பொருள் விவகாரம் : சிங்கம் பட பாணியில் நடந்த சம்பவம் !

Share it if you like it

கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க, மாநகர காவல் ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையின் முடிவில், கடந்த மே 17 ஆம் தேதி 6 பேர் கொண்ட போதைப்பொருள் விற்பனை தொடர்பான கும்பல் கைது செய்யப்பட்டனர். கவுதம், அபிமன்யு, பாசில், முகமது அர்சித், இஜாஸ், பெவின் ஆகிய அந்த 6 பேரிடம் இருந்து 102 கிராம் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், கைதானவர்களுக்கு திண்டுக்கல்லை சேர்ந்த பிரவீன்குமாரும், கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த வினோத்தும்தான் போதைப்பொருள் விநியோகம் செய்கின்றனர் என்பது காவல்துறைக்கு தெரியவந்தது. இவர்கள் இருவரும் கர்நாடக மாநிலம் பெங்களூரு, தார்வார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து போதைப்பொருளை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து பிரவீன்குமார், வினோத் ஆகியோரை கைது செய்து காவல்துறை விசாரணை நடத்தியபோது, போதைப் பொருள் கடத்தலுக்கு முக்கியமாக செயல்பட்டது கென்யா நாட்டை சேர்ந்த இவி பொனுகே (26) என்ற பெண் என்பது தெரியவந்தது.

இவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவரது கூட்டாளியான உகாண்டா நாட்டை சேர்ந்த காவோன்கே என்பவரை சந்திக்க சென்றபோது கோவை தனிப்படை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்து கோவை அழைத்து வந்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையில் அவருக்கு மேலும் பல சர்வதேச போதைப்பொருள் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைதான கென்யா பெண் இவி பொனுகே, தார்வார் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் சட்டக் கல்வி படிப்பதற்காக தங்கி இருந்ததும், பின் படிப்பை முடிக்காமலும், விசா காலாவதியான நிலையில், தொடர்ந்து தார்வார், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் தங்கி இருந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இந்த கணக்கில் ரூ.49 லட்சம் இருந்துள்ளதை கண்டறிந்த தனிப்படையினர், அதனை முடக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காவோன்கே என்பவரை கர்நாடக காவல்துறை மூலம் கைது செய்யவும் கோவை தனிப்படை காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே தற்போதைக்கு கைதான கென்யா பெண் உள்பட 3 பேரும் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *