சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற நபர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்த நிலையில் செங்குன்றம் பகுதியை சேர்ந்த மன்சூர், சையது இப்ராஹிம் ஆகிய இருவரும் போதைப்பொருள் விற்பனை செய்து வந்துள்ளதாக வழக்குப்பதிவு செய்து போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.
மேலும் கிளாம்பாக்கத்தில் பிடிபட்ட நபர்களிடம் நடந்த விசாரணையின் அடிப்படையில் செங்குன்றத்தில் சோதனை செய்தபோது 70 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சையது இப்ராஹிம் என்பவர் திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணைத் தலைவர் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் சர்வசேத அளவில் போதைப் பொருட்களை கடத்தி வந்ததாகக் கூறி, திமுக முன்னாள் நிர்வாகியும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளருளான ஜாபர் சாதிக்கை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சில நாட்களுக்கு முன் கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மீண்டும் போதைப்பொருள் கடத்தலில் திமுக நிர்வாகி ஈடுப்பட்டிருப்பது திமுக கட்சியில் பெரிய பிரளயத்தை கிளப்பியுள்ளது.
போதைப்பொருள் வழக்கில் திமுக நிர்வாகிகள் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சம்பவத்தால் சமூக வலைத்தளங்களில் திமுக அரசை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.