திருவண்ணாமலையில் போதைப்பொருள் : ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இருவர் கைது !

திருவண்ணாமலையில் போதைப்பொருள் : ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இருவர் கைது !

Share it if you like it

திருவண்ணாமலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பல்வேறு வகையான போதைப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக. சென்னை மண்டல மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அத்தகவலின் அடிப்படையில், திருவண்ணாமலையில் தனியார் நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில், மத்திய போதைு் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த நிகழ்ச்சியில் அமனிடா, மஸ்காரிய, அயாஹூஸ்கா, கம்போ (தவளை விசம்) உள்ளிட்ட போதை பொருட்களை அவர்கள் பயன்படுத்த இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அங்கு தங்கி இருந்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இருவரை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட ரஷ்யாவைச் சேர்ந்தவர்களிடமிருந்து, 239 கிராம் அளவிலான டிஎம்டி, சைலோ, சைபின் உள்ளிட்ட வகையைச் சேர்ந்த போதைப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை கைது செய்து நடத்தப்பட்ட விசாரணையில் வரும் 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை திருவண்ணாமலை நிகழ்ச்சியில் அவர்கள் இந்த போதைப்பொருட்களை பயன்படுத்த இருந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இருவரும் இதேபோன்று ரிஷிகேஷ், மணாலி உள்ளிட்ட பகுதிகளில் நிகழ்ச்சிகள் நடத்தி, அங்கும் இதுபோன்ற போதைப்பொருட்களை மக்களிடம் விற்பனை செய்து, பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது. பின்னர், இருவரையும் கைது செய்துள்ள மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இவர்களுக்கு பின்னணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நபர்கள் தொடர்பில் உள்ளார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share it if you like it