ஸ்டாலின் துபாய் விசிட், புர்ஜ் கலீபாவில் தமிழ்நாடு குறித்த காணொளி ஒளிபரப்பப்பட்டது எப்படி என்கிற ரகசியம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
உலக கண்காட்சி என்பது மிகப் பழமையான அதேசமயம், மிகப்பெரிய அளவிலான சர்வதேச நிழ்ச்சியாகும். இது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. 6 மாதகாலம் நடைபெறும் இக்கண்காட்சியில் உலகம் முழுவதும் இருந்து 100-க்கணக்கான நாடுகள் பங்கேற்கும். அந்த வகையில், அரசு நாடான துபாயில் நிகழாண்டு உலக கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் நடத்தப்படும் முதல் கண்காட்சி இதுவாகும். 2021 அக்டோபர் 1-ம் தேதி தொடங்கிய இக்கண்காட்சி மார்ச் 31-ம் தேதியோடு நிறைவடைகிறது. இதில், இந்தியா உட்பட 192 நாடுகள் பங்கேற்றிருக்கின்றன. இக்கண்காட்சி புர்ஜ் கலீபா என்கிற துபாயிலுள்ள மிக உயரமான கட்டடத்தில் நடந்து வருகிறது. இதில்தான், தமிழகமும் நமது மாநிலத்தின் அருமை பெருமைகளை விளக்கும் வகையில், ஒரு காணொளியை ஒளிபரப்பி இருக்கிறது.
சரி, விஷயத்துக்கு வருவோம்… இந்த காணொளியை ஒளிபரப்பியவரை சரிதான். ஆனால், இதன் மூலம் சர்வதேச அரங்கில், தமிழகத்தைப் பற்றியும், தமிழர்களின் நாகரிகத்தைப் பற்றியும் மக்கள் தெரிந்துகொள்ள வழிவகை ஏற்படும் என்று கூறுவதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். காரணம், இந்த காணொளி வெறும் 3 நிமிடங்களே ஓடக்கூடியது. அதேசமயம், இதற்காக 50 லட்சம் முதல் 75 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது என்பதுதான் அதிர்ச்சித் தகவல். என்ன ஷாக் ஆகிட்டீங்களா? ஆம், துபாயில் நடக்கும் ஒரு சர்வதேச கண்காட்சியில் இந்தியாவின் கடைக்கோடியில் இருக்கும் ஒரு மாநிலத்தைப் பற்றி சும்மாவா ஒளிபரப்புவார்கள்? ஆகவே, இப்படியொரு காணொளியை தமிழகத்தில ரெடி செய்து, அதை துபாயில் ரெக்கார்டிங் தியேட்டர் வைத்திருக்கும் ஏ.ஆர்.ரகுமானிடம் கொடுத்து, இசை, பட்டி, டிங்கரிங் எல்லாம் முடித்து தயார் செய்திருக்கிறார்கள். இதற்காக ஸ்டாலின் மருமகன் சபரீசன் கடந்த மாதமே துபாய்க்குச் சென்று மொத்த ஏற்பாடுகளையும் கவனிக்கத் துவங்கி விட்டார்.
இது மட்டுமா? ஸ்டாலின் துபாய்க்கு வரும்போது ஏர்போர்ட்டில் வரவேற்பு பலமாக இருக்க வேண்டும் என்பதற்காக, அங்குள்ள தி.மு.க.வினரையும், திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களையும் ஒருங்கிணைக்கும் பணிகளையும் செய்திருக்கிறார். இந்த கூட்டம்தான் ஸ்டாலின் துபாய் ஏர்போர்ட்டை விட்டு வெளியே வரும்போது, வாழ்த்து கோஷம் போட்டது. இதில் ஹைலைட் என்னவென்றால், துபாயில் ஸ்டாலின் கலந்துகொள்ளும் கூட்டத்துக்கு ஆள் சேர்ப்பதற்காக, கடந்த மாதம் ஆன்லைன் மூலம் அழைப்பு விடுத்து, ஒரு டெட்லைன் தேதியும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், குறிப்பிட்ட தேதியில் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் சேரவில்லை. எனவே, டெட்லைன் தேதியை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிப்பு செய்திருக்கிறார்கள். அப்படியும் அரங்கம் ஃபுல்லாகவில்லை. ஆகவே, துபாய் எஃப்.எம். ரேடியோவில் ‘ஸ்டாலின்தான் வராரு, விடியல் தரப்போறாரு’ என்ற பாடலை 2 நாட்கள் ஒலிபரப்பியதோடு, கூட்டத்தில் பங்கேற்க அனுமதி இலவசம்னு அறிவிப்பு செய்திருக்கிறார்கள். அப்படியும் அரங்கம் ஃபுல்லாகவில்லையாம். இதன் காரணமாக, ஸ்டாலின் கலந்துகொண்ட கூட்டத்தில் ஏராளமான இருக்கைகள் காலியாக இருந்ததற்கு காரணமாம். தி.மு.க.வினரின் இத்தகைய நடவடிக்கைகளை பார்த்துவிட்டு, துபாய் வாழ் தமிழர்கள் சிரிப்பாய் சிரித்திருக்கிறார்கள்.
ஆக, துபாயில் ஸ்டாலின் கூட்டத்துக்கு ஆள் சேர்த்ததும், புர்ஜ் கலீபாவில் செம்மொழியான தமிழ் ஒளிர்ந்ததற்கும் இதுதான் காரணம். நடந்தது இப்படி இருக்க, இங்குள்ள உ.பி.ஸ்களோ ‘ஆகா ஓகோ, உலகத் தலைவர் ஸ்டாலின், தமிழர்களின் எழுச்சி நாயகன். அடுத்த பிரதமர் ஸ்டாலின்தான்’ என்றெல்லாம் பில்டப் செய்து வருகின்றனர் என்பதுதான் வேடிக்கை. தற்போது, தி.மு.க.வின் தில்லாலங்கடி வேலைகள் அம்பலமாகி விட்டதால், நெட்டிசன்கள் தி.மு.க.வினரை கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்.