உலக நாடுகளில் சுற்றுலாவுக்கென பெயர்பெற்ற நாடுகளில் முக்கியமானது துபாய். ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுவனைத் துபாய் காவல்துறை பாராட்டி, சான்றிதழ் வழங்கி பாராட்டியிருக்கிறது. இது குறித்து வெளியான தகவலில்,“சுற்றுலா தலத்துக்குத் தன் தந்தையுடன் சென்ற சிறுவன் முகமது யூனுஸ், அங்கு ஒரு விலை உயர்ந்த கை கடிகாரத்தைப் பார்த்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, உடனடியாக, சுற்றுலாத் துறை காவல் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்.
மேலும், அதை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். காவல்துறையும் அந்த கடிகாரத்தை உரியவர்களிடம் ஒப்படைத்திருக்கிறது. இந்த நிலையில், விலையுயர்ந்த கடிகாரத்தைப் பத்திரமாக காவல்துறையிடம் ஒப்படைத்த முகமது யூனுஸை பாராட்டும் விதமாகத் துபாய் காவல்துறை நேர்மையின் அடையாளம் எனச் சிறுவனைப் பாராட்டி அன்பளிப்பும், சான்றிதழும் வழங்கி பாராட்டியிருக்கிறது. இந்த தகவலை அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறது.