கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மணப்பாக்கத்தை சேர்ந்த தமிழ்செல்வன் என்னும் மாணவன் கடலூர் அரசு கல்லூரியில் படித்து வந்தார். நேற்று முன்தினம் கல்லூரி முடித்துவிட்டு, ஷேர் ஆட்டோவில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது ஆட்டோவில் அதிமான நபர்களை ஏற்றி சென்றுள்ளதால் கடலூர் உப்பனாறு பாலம் அருகே சென்றபோது ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே கல்லூரி மாணவன் தமிழ்செல்வன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது உடலுக்கு ஊர் மக்கள், மாணவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வந்தனர். விபத்துக்குள்ளான மாணவனின் குடும்பத்துக்கு 2 லட்சம் ரூபாய் அரசு அறிவித்தது. இந்நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு கல்லூரி மாணவர்கள் கடலூர்-சேலம் நெடுஞசாலையில் மறியல் செய்து, எங்களுக்கு தரமான பேருந்து வசதி செய்து தர வேண்டுமெனவும், இழப்பீட்டுத்தொகை 2 லட்சத்திற்கு பதில் 10 லட்சம் தர வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கோட்டாட்சியர் அதியமான் கவியரசு மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேருந்து வசதி இல்லாததால் ஆட்டோவில் சென்று பலியான கல்லூரி மாணவன் !
Share it if you like it
Share it if you like it