நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மின்தடை ஏற்பட்டதை தொடர்ந்து இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில், விலையில்லா மிதிவண்டி வழங்கும் அரசு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தி.மு.க.வை சேர்ந்த முக்கிய நபர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, அமைச்சர் துரைமுருகன் பேசும் போது, திடீரென மின்சாரம் தடைப்பட்டது. இதனால், உஷ்ணமான அமைச்சர் சிறிது நேரம் கடுப்புடன் மேடையில் நின்று கொண்டு இருந்தார். ஆனாலும், மின்சாரம் வரவில்லை நடப்பது விடியல் ஆட்சி என்பதை உணர்ந்து கொண்ட அமைச்சர் பாதியிலேயே விழாவை முடித்துக் கொண்டு வெளியேறினார்.
இப்படிப்பட்ட சூழலில், மின்வாரிய உதவி பொறியாளர்கள் 2 பேர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றனர். இச்சம்பவம், மின்வாரிய ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு, தடவை மின் தடை ஏற்பட்ட சம்பவத்திற்கே, அமைச்சருக்கு இவ்வளவு கோவம் என்றால், தினம் தினம் அணிலால் தமிழக மக்கள் அனுபவிக்கும் கொடுமைகள் எவ்வளவு இருக்கும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.