Share it if you like it
ஜம்முவில் உள்ள விமான படை தளத்தில், அதிகாலை 2 மணியளவில் சக்தி குறைந்த குண்டுகள் வெடித்தன இந்த சம்பவத்தில், ஒரு குண்டு, விமானப்படை மேல் தளத்தில் வெடித்தது. இதனால் அங்கு சிறிய அளவில் சேதம் ஏற்பட்டது. மற்றொரு குண்டு திறந்தவெளியில் வெடித்தது. அதில், பாதிப்பு ஏதும் இல்லை. இந்த சம்பவத்தால், யாருக்கும் காயம் அல்லது உயிரிழப்பு ஏற்படவில்லை. டுரோன் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. சம்பவ இடத்திற்கு தேசிய வெடிகுண்டு தகவல் மைய நிபுணர்கள் மற்றும் தடயவியல் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, விமானப்படை அதிகாரிகளிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார். மேலும், ஏர் மார்ஷல் விக்ரம் சிங், விமானப்படை தளத்திற்கு சென்று ஆய்வு செய்ய உள்ளார்.
Share it if you like it