வருமான வரி சோதனையில் திமுக அமைச்சர் எ வ வேலு – ராகு காலத்தில் வம்பு வழக்கில் சிக்கிய பரிதாபம்

வருமான வரி சோதனையில் திமுக அமைச்சர் எ வ வேலு – ராகு காலத்தில் வம்பு வழக்கில் சிக்கிய பரிதாபம்

Share it if you like it

எதிர்க்கட்சியாக இருந்த காலங்களில் கூட தமிழகத்தில் அரசியல் ரீதியாக வலுவாகவும் ஆளும் கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் இருப்பது தான் திமுகவின் அரசியல் வரலாறு. அவர்களின் அராஜகம் அதிரடி அத்துமீறல் அட்டூழியம் எல்லாம் எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஆளும் கட்சியின் அராஜகம் என்று சீறிவரும். ஆளும் கட்சியாக இருக்கும் போது ஆட்சி அதிகாரம் என்ற வகையில் அனைவரையும் அராஜகத்தில் அடக்கி ஆளும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டு காலமாக திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்ததிலிருந்து திமுகவிற்கு இது போறாதகாலம் என்ற அளவில் சோதனை மேல் சோதனை வரிசை கட்டுகிறது.

ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே மேல்தட்டு மக்கள் முதல் சாமானிய மக்கள் வரை அனைவரின் அதிருப்தியையும் சம்பாதித்தது வரி உயர்வு கட்டண உயர்வு திரும்பிய பக்கம் எல்லாம் விலைவாசி உயர்வு சட்டம் ஒழுங்கு சீரழிவு என்று மொத்தமாக தமிழகம் இறங்கு முகத்தில் பயணித்தது.

ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியில் இருந்த தமிழகம் திமுகவின் இலவச பேருந்து பயணம் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்களால் மேலும் சீரழிவை நோக்கி நகரும் என்று அரசு எந்திரமே ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை மாறத் தொடங்கியது. இதெல்லாம் போதாது என்று கடந்த காலங்களிலும் சம காலத்திலும் அதிகார கொள்ளையின் மூலம் சொத்துக்களை குவித்த. திமுகவின் அமைச்சர்கள் முன்னாள் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது அடுத்தடுத்து வருமான வரி சோதனைகளும் வரிசை கட்டி வருகிறது. இதில் திமுகவின் ஏடிஎம் என்று குறிப்பிடப்பட்ட கரூர் செந்தில் பாலாஜி ஏற்கனவே வருமானவரித்துறை சோதனை அமலாக்கத் துறை சோதனைகள் சிக்கி வழக்கில் கைது செய்யப்பட்டு இன்று வரை ஜாமீன் மறுக்கப்பட்ட சிறையில் இருக்கிறார்.

திமுகவின் பொன்முடி தங்கம் தென்னரசு உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பலரும் ஊழல் வழக்குகளில் இருந்து விடுவித்தது செல்லாது என்று உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிந்ததில் எந்நேரமும் மீண்டும் சிறை செல்ல வேண்டி வரலாம் என்ற நிலை. யாருமே நெருங்க முடியாது என்று அடையாளப்படுத்தப்பட்ட திமுகவின் ரிசர்வ் வங்கி என்று குறிப்பிடப்படும் ஜெகத்ரட்சகன் வீடும் சொந்தமான அலுவலகங்கள் தொழில் வளாகங்களிலும் வருமான வரித்துறையும் அமலாக்கத் துறையும் சோதனையில் இறங்கியது. இதில் அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் விசாரணை தொடர்ந்து வருகிறது . எந்நேரமும் அவரும் கைது செய்யப்பட்டு சிறை செல்லக்கூடும் என்ற நிலை. இந்த அதிர்ச்சியில் இருந்து திமுகவின் தலைமையும் உடன்பிறப்புகளும் மீலாத நிலையில் தற்போது வட மாவட்ட திமுகவின் அதிகார மையமாக இருக்கும் வேலுவை சுற்றி வருமான வரித்துறை சோதனையும் விசாரணைகளும் களமிறங்கி இருப்பது திமுகவை அதிர வைத்திருக்கிறது.

இ வ வேலு ஆரம்ப காலத்தில் அதிமுகவில் இருந்தவர். சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் பொறுப்பில் இருந்தவர். தனது சொந்த செல்வாக்கு காரணமாக சாதிய வாக்கு வங்கி சுற்றுவட்டாரங்களில் அரசியல் பலத்தோடு இருந்தவர் . அதிமுகவின் தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் வேலுவை அவரது அரசியல் சகாக்களை கொண்டே திட்டமிட்டு திமுகவிற்கு கருணாநிதி அழைத்து வந்தார். பிறகு தொடர்ச்சியாக திமுகவில் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பை இருக்கிறார் திருவண்ணாமலை அல்லது அதனை சுற்றி இருக்கும் தண்டாரம் பட்டு உள்ளிட்ட ஏதேனும் ஒரு தொகுதி இவா வேலுவுக்கு தான் என்ற எழுதாத சட்டம் திமுக தலைமையில் அமலில் இருக்கும். அந்த அளவிற்கு கருணாநிதி காலம் முதல் உதயநிதி வரை மூன்று தலைமுறைகளும் திமுகவின் தலைமையில் நெருங்கிய இணக்கமும் வலுவான பண பலம் அதிகார பலத்தோடு இருப்பவர்.

அருணை மருத்துவக் கல்லூரி அருணை பொறியியல் கல்லூரி அருணை தொழில்நுட்பக் கல்லூரி அருணை கலை அறிவியல் கல்லூரி அருணை சர்வதேச உறைவிட பள்ளி அருணை அறக்கட்டளை என்று திருவண்ணாமலை முதல் சென்னை வரையிலும் திரும்பிய பக்கம் எல்லாம் வேலுவின் கல்வி நிறுவனங்கள் வர்த்தக வலாகங்கள் தொழில் சாம்ராஜ்யங்கள் கனிம வளம் கட்டுமான தொழில் சம்பந்தமான பிரம்மாண்டமான தொழில் வளாகங்கள் மிரட்டும். அரசியலுக்கு வருவதற்கு முன்பு ஒரு சாமானிய வாழ்வில் இருந்தவர். அதிமுக அதன் பிறகு திமுக என்று மாறி மாறி அரசியல் பிரவேசம் செய்த பிறகு பொருளாதார ரீதியாக அடியோடு மாறினார். அதிலும் திமுகவில் சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் என்ற கோலோச்ச தொடங்கிய போது அசுர வளர்ச்சி கண்டவர் .

180 க்கும் மேற்பட்ட மத்திய வருமான வனத்துறை அதிகாரிகள் சுமார் 60 குழுக்களாக பிரிந்து திருவண்ணாமலை முதல் சென்னை வரையிலும் பறந்து விரிந்து இருக்கும் ஈவா வேலுவிற்கு சொந்தமான வீடு அலுவலகம் தொழில் வளாகங்கள் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை விடிய விடிய வருமான வரி சோதனைகளை நடத்தி வருகிறது. இவர்களுக்கு துணையாக துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இதில் இவருக்கு நெருக்கமாக அறியப்படும் திமுகவின் தற்போதைய உள்ளாட்சி குழு கவுன்சிலர் ஒருவர் வருமானவரித்துரையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகிறது.

திமுகவின் மூத்த அமைச்சர்கள் நிர்வாகிகள் எல்லோரும் சொல்லி வைத்தார் போல பாஜகவை எதிர்க்கிறேன் என்ற பெயரில் தேசிய இறையாண்மை ஒருமைப்பாடு அவமதிக்கும் வகையில் பேசத் தொடங்கினார்கள். பகுத்தறிவு பேசுகிறேன் என்ற பெயரில் இந்து இந்திய விரோத கருத்துக்களை மேடைதோறும் வாரி வழங்கினார்கள். அப்போதே அரசியல் விமர்சகர்கள் கடந்த காலங்களைப் போல மத்தியில் இருப்பது காங்கிரஸ் கட்சி ஆட்சியும் அல்லது கூட்டணியில் இருக்கும் வாஜ்பாய் ஆட்சியும் இல்லை. தேசம் முழுவதிலும் இருக்கும் பெரும்பான்மை இந்து மக்களின் ஏகோபித்த ஆதரவோடு இருக்கும் பாஜக வலுவான ஆட்சியில் இருக்கிறது. வட இந்திய மக்கள் தீவிரமான ஆன்மீக அரசியலில் இருப்பவர்கள். கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு அவர்களின் ஆன்மீகம் தேசியம் மட்டுமே அவர்களை அரசியல் சார்பு எடுக்க வைக்கும். அவ்வகையில் ஊடகங்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக தமிழகத்தில் நடக்கும் இந்து இந்திய விரோதங்கள் நாடு முழுவதும் பரவலாக்கப்படும் போது அதன் விளைவுகள் திமுகவிற்கு விபரீதமாக மாறக்கூடும். ஒரு புறம் தமிழகத்தின் கட்சி ஆட்சி இரண்டும் அபாயத்தில் சிக்கும். மறுபுறம் தேசிய அரசியலில் திமுக தனிமைப்படுத்தப்படும். அதன் மூலம் தமிழக அரசியலிலும் திமுக செல்லா காசாக்கப்படும். அதனால் இது போன்ற விஷயங்களில் கடந்த காலங்களைப் போல அலட்சியம் வேண்டாம். கூடுதல் எச்சரிக்கை தேவை என்று அரசியல் விமர்சகர்களும் திமுகவின் நலன் பெருமைகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தார்கள். ஆனால் திமுகவினர் யாரும் அதைக் கேட்ட பாடில்லை.

ஆட்சி அதிகாரம் இருக்கிறது . கடந்த காலங்களில் மலை போல் குவித்து வைத்த செல்வம் இருக்கிறது. அதை எல்லாம் சட்டபூர்வமாக பன்மடங்கு பெருக்கி வைக்கும் வியாபார வர்த்தகத் தளங்கள் இருக்கிறது. அனைத்திற்கும் மேலாக சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் கட்சியின் மாவட்ட செயலாளர் என்ற பொறுப்பு இருக்கிறது. நம்மை யார் என்ன செய்து விட முடியும் ? என்ற இறுமாப்பில் தான் பெரும்பாலான மூத்த அமைச்சர்கள் நிர்வாகிகள் சகட்டுமேனிக்கு இந்து இந்திய விரோதம் பேசி வந்தார்கள் . ஆனால் அரசியல் விமர்சனங்களும் அவர்களின் நலன் விரும்பிகளும் எச்சரித்தது போல இன்று இவர்களின் மேடை பேச்சுக்கள் எல்லாம் நாடு முழுவதும் போய் திமுகவிற்கும் அதன் தலைமைக்கும் எதிரான எதிர்மறை பிம்பத்தை கட்டமைக்க தொடங்கிவிட்டது. அதன் காரணமாகத்தான் திமுகவிற்கு இவ்வளவு நெருக்கடிகள் வரும்போது கூட அது சார்ந்த கூட்டணி கட்சிகளோ அது தேசிய அளவில் அங்கம் வகிக்கும் இயந்திர கூட்டணியில் இருப்பவர்கள் கூட திமுகவிற்கு ஆதரவாக வாய் திறக்காமல் மௌனம் காக்கிறார்கள்.

தற்போது வருமான வரி சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் வேலு திமுகவின் சட்டமன்ற உறுப்பினர். பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் திமுகவின் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருப்பவர். சில மாதங்களுக்கு முன்பு இந்தியா என்பதை நாங்கள் ஒரு பொருட்டாகவே எப்போதும் நாம் கருதுவதில்லை.‌ இந்தியா என்றால் அது ஏதோ ஒரு வடநாட்டு பகுதி என்ற அளவில் தான் இங்கு புரிதல் இருக்கிறது . நமக்கு தமிழ்நாடு தான் பிரதானம் . தமிழ்நாடு என்பதற்குத்தான் நாம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம் என்றெல்லாம் பேசி இருந்தார். இது பிரதமரின் நேரடி பார்வை வரை கொண்டு செல்லப்பட்டது. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்து பிரதமர் திமுகவின் அமைச்சர் வேலு இந்தியா என்பது எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை தமிழ்நாடு அதன் வரையறையும் மட்டுமே எங்களுக்கு முக்கியம் என்ற வகையில் பேசி இருக்கிறார். இது அப்பட்டமான ஒருமைபாட்டு எதிர்ப்பு அரசியல் நிலைப்பாடாகும். திமுகவின் மக்கள் பிரதிநிதியாக சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் பொறுப்பில் இருக்கும் அவரது பேச்சுக்கு திமுகவும் அது சார்ந்த கூட்டணி கட்சியான காங்கிரசும் பொறுப்பேற்குமா? என்று கேள்வி எழுப்பினார் . வேலுவின் பேச்சையும் அதை கண்டிக்காமல் கள்ள மவுனம் காத்த திமுகவின் இந்திய விரோதத்தையும் அதை மறைமுகமாக ஆதரிக்கும் காங்கிரசின் தேச விரோதத்தையும் நாடு முழுவதும் கொண்டு போய் சேர்த்தார்.

ஏற்கனவே பல அமைச்சர்கள் கனிமவளத்துறை வந்தவர்கள் உள்ளிட்டவர்கள் வருமானவரித்துறை அமலாக்கத்துறை சோதனை விசாரணையின் கீழ் அகப்பட்டு இருக்கிறார்கள். இதை எல்லாம் பார்க்கும் சாமானிய மக்கள் ஒரே ஒரு அமைச்சர் கூட யோக்கியன் இல்லையா?‌ ஒரே ஒரு எம்எல்ஏ எம்பி கூட ஊழல் லஞ்சம் இல்லாமல் வாழ்பவன் இல்லையா? என்று புலம்ப தொடங்கினார்கள். நாள் முழுவதும் உழைத்தாலும் தங்களின் அன்றாட தேவைக்கும் வாழ்வின் அடுத்த கட்ட நகர்விற்கும் பெரும் போராட்டத்தில் இருக்கும்போது வெறும் ஆட்சி அதிகாரம் அரசியல் பதவிகளை மட்டும் வைத்துக் கொண்டு இவர்களால் எப்படி இப்படி கோவைகளில் குவிக்க முடிகிறது? என்ற ஆதங்கமும் தொடர்ந்து அரசியல்வாதிகளுக்கும் ஊழல்வாதிகளுக்கும் எதிராக மக்கள் மனதில் எதிரொலிக்க தொடங்கியது .ஆனால் ஒரு ஆளும் கட்சியாக சாமானிய மக்களின் எதிர்ப்பையும் வெகுஜன மக்களின் அதிருப்தியையும் தேடிக் கொள்வது தற்கொலை முயற்சி என்பதை உணராத திமுக தொடர்ந்து அராஜகத்தை அரங்கேற்றியது . இன்று அடுத்தடுத்து வருமான வரி சோதனை அமலாக்கத்துக்கொரு சோதனை என்று இறுகி வருகிறது. இதனை பார்க்கும் சாமானிய மக்களுக்கு இதுவரையில் அரசியல்வாதிகள் குற்றம் இழைத்தால் ஊழலில் சொத்துக்களை குவித்தால் நீதிமன்றங்களில் ஏதோ பெயருக்கு தண்டனை கிடைக்கும். அதை தவிர வேற என்ன நடந்துவிடும் ? என்ற விரக்தி இருந்தவர்கள் என்று மத்தியில் இருக்கும் வருமான வரித்துறை அமலாக்க துறையின் அதிகாரங்கள் அதன் மூலம் முடக்கப்படும் ஊழல்வாதிகளின் சொத்துக்கள் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகளை பார்க்கும்போது மக்களை சட்டத்தை ஏமாற்றி ஊழலில் சொத்துக்களை குவித்தாலும் அது சட்டத்தின் வழியில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் போது நிச்சயம் ஒரு நாள் தடுக்கப்படும். அதற்கு தேவை ஊழலற்ற நேர்மையான அரசாட்சியை வழங்கும் தேசிய சார்புள்ள மக்கள் நலன் விரும்பும் கட்சியும் ஆட்சியும் என்பதை உணர தொடங்கி விட்டார்கள்.


Share it if you like it