இலவச தடுப்பூசிகளில் 85% சதவீதம் மத்திய அரசு உடையது..! தி.மு.க அரசு திறந்து வைத்த தடுப்பூசி நிறுவனத்தின் நிலை என்ன? பிரபல அரசியல் விமர்சகர் சரமாரி கேள்வி..!

இலவச தடுப்பூசிகளில் 85% சதவீதம் மத்திய அரசு உடையது..! தி.மு.க அரசு திறந்து வைத்த தடுப்பூசி நிறுவனத்தின் நிலை என்ன? பிரபல அரசியல் விமர்சகர் சரமாரி கேள்வி..!

Share it if you like it

மத்திய அரசு பாரபட்சமின்றி அனைத்து மாநில அரசுகளுக்கும் தேவையான அளவு கொரோனா தடுப்பூசிகளை இன்று வரை வழங்கி வருகிறது. மற்ற மாநில அரசுகள் மத்திய அரசு உடன் சுமூகமான உறவினை மேற்கொண்டு தங்களுக்கு தேவையான உதவிகளை பெற்று வருகிறது. ஆனால் தமிழக அரசு மத்திய அரசு உடன் மோதல் போக்கினை மேற்கொள்வதோடு மட்டுமில்லாமல் ஸ்டிக்கர் ஒட்டும் பணியில்  ஈட்டுபட்டு வருகிறது.

இந்நிலையில் பிரபல அரசியல் விமர்சகர் செல்வ குமார் அவர்கள் தமிழக அரசிற்கு இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்திற்கு மத்திய அரசு இலவசமாக 2.2 கோடி வழங்கியுள்ளது எனவும், தமிழக மக்களுக்கு செலுத்தப்பட்ட 85% சதவீதம் தடுப்பூசி மத்திய அரசு உடையது எனவும் செங்கல்பட்டில் தமிழக அரசால் திறந்து வைகப்பட்ட தடுப்பூசி நிறுவனத்தின் தற்பொழுதைய நிலை என்ன? என்று தமிழக அரசிற்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it