சமீபத்தில் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் கடந்த 18 ஆம் தேதி திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயில் வடக்கு மாட வீதியில் 80 வயது முதியவர் சுந்தரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் செவித் திறனற்ற மற்றும் வாய் பேச இயலாக மாற்றுத்திறனாளியாவார். அவர் சாலையில் சென்றுகொண்டிருந்தபொழுது தெருவோரம் சுற்றித்திரிந்த மாடு ஒன்று தனது கொம்பினால் முட்டி தூக்கி வீசியது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலன் இன்றி முதியவர் இறந்துபோனார். இதுதொடர்பாக மேயர் பிரியா அவர்கள், முதியவர் உயிரிழந்ததற்கு மாடு முட்டியது மட்டுமே காரணம் என சொல்லிவிட முடியாது. அவருக்கு ஏற்கனவே நிறைய உடல்நல பாதிப்புகள் இருந்துள்ளது என்று கூறினார்.
சென்னை முழுவதும் பல பகுதிகளில் இதுபோல் சாலையோரங்களில் கேட்பாரின்றி கால்நடை விலங்குகள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் சுற்றி கொண்டிருக்கிறது. அதற்கு ஒரு நடவடிக்கை எடுக்காமல் இறந்துபோன முதியவருக்கு இழப்பீடும் வழங்காமல் இந்த பிரச்சனையிலிருந்து நழுவ எதோ ஒரு உப்புசப்பில்லாத காரணத்தை கூறி தப்பித்து கொள்ள பார்க்கிறார். இதே நிகழ்வில் ஒரு இளைஞன் மாடு முட்டி இறந்திருந்தால் இதே காரணம் தான் மேயர் பிரியா கூறியிருப்பாரா? என்று நெட்டிசன்கள் சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.