டாஸ்மாக்கில் இருந்த ‘ஒயினை’ எலிகள் குடித்து விட்டதாக ஊழியர்கள் குற்றச்சாட்டு..! 

டாஸ்மாக்கில் இருந்த ‘ஒயினை’ எலிகள் குடித்து விட்டதாக ஊழியர்கள் குற்றச்சாட்டு..! 

Share it if you like it

ஊரடங்கு தளர்வுகள் அறிவித்ததை அடுத்து அனைத்து மாவட்டத்திலும் உள்ள மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில்  நீலகிரி மாவட்டம் கூடலூர் காலம்புழா பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை இன்று காலை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர் ஆகியோர் திறந்து பார்த்தனர். அப்போது, கடையில் இருந்த 12 குவாட்டர் பாட்டில்களின் மூடி சேதப்படுத்தப்பட்டு இருந்தது. அதிலிருந்த ஒயின் காலியாக இருப்பதை கண்டு, ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து தீவிர ஆய்வு மேற்கொண்டதில் இதற்கு எலிகள் தான் காரணம்  என்று ஊழியர்கள் தெரிவித்து உள்ளனர். இதன் மதிப்பு ரூ.1,900 என்று கூறப்படுகிறது. மின் தடைக்கு அணில்கள் தான் காரணம் என்று அமைச்சர் அணில் பாலாஜி அண்மையில், கூறியிருந்த நிலையில்., குடிமகன்களை ஏமாற்ற  எலி கதையை மதுக்கடை ஊழியர்கள் ஏன்? கூறியிருக்க கூடாது என்று மதுப்பிரியர்கள் உட்பட நெட்டிசன்கள் வரை கருத்து தெரிவித்து வருகின்றனர்.

டாஸ்மாக், எலி, ஒயின்


Share it if you like it