நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்ற குற்றச்சாட்டில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மஹுவா மொய்த்ராவை வரும் 19-ம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்ப தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா பணம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து பாஜக எம்.பி., வினோத் குமாா் சோன்கா் தலைமையிலான மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி, மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைத்தது.
இதனைத்தொட்ர்ந்து அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது.
இதனிடையே வெளிநாட்டு பண பரிவர்த்தனை மோசடி தொடர்பாக மஹுவா மொய்த்ரா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக வரும் 19-ம் தேதி டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை மஹுவா மொய்த்ராவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.