வசமாக சிக்கிய பி.பி.சி. தலைவர்: பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓட்டம்!

வசமாக சிக்கிய பி.பி.சி. தலைவர்: பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓட்டம்!

Share it if you like it

பிரதமர் மோடிக்கு எதிராக ஆவணப்படம் வெளியிட்ட பி.பி.சி. தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்டு ஷார்ப், இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடன் வாங்கிக் கொடுத்த விவகாரத்தில் வசமாக சிக்கி இருக்கிறார். இதனால், பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பி.பி.சி. தொலைக்காட்சி மற்றும் ரேடியோ செய்தி ஒலிபரப்பு நிறுவனம். 100 ஆண்டுகள் பழமையான இந்நிறுவனம் இங்கிலாந்து அரசுக்குச் சொந்தமானது. இத்தொலைக்காட்சி உலகம் முழுவதும் தனது கிளைகளை வைத்திருக்கிறது. இதனால், புகழ்பெற்ற நிறுவனமாக அறியப்படுகிறது. இந்தியாவிலும் மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு இத்தொலைகாட்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக ரிச்சர்டு ஷார்ப் என்பவர் 2021 ஜனவரியில் பதவியேற்றார்.

இந்த சூழலில், இத்தொலைக்காட்சி நிறுவனம் சமீபத்தில் மோடி குறித்த ஒரு ஆவணப்படத்தை 2 பாகங்களாக வெளியிட்டது. அதாவது, 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பாகவும், இக்கலவரத்தில் அப்போது குஜராத் முதல்வராகவும், தற்போது நாட்டின் பிரதமராகவும் இருக்கும் மோடிக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டி இருந்தது. இது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. அதேசமயம், அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக், இந்த ஆவணப்படம் குறித்து கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், அந்நாட்டு எம்.பி. பாப் பிளாக்மேன் தனது கண்டனத்தை பதிவு செய்ததோடு, மேற்கண்ட ஆவணப்படத்தை பிபிசி நிறுவனம் எடுக்கவில்லை. தனியார் நிறுவனம் மூலம் எடுக்கப்பட்டது என்கிற உண்மையை போட்டு உடைத்தார்.

இந்த நிலையில்தான். தன் வினை தன்னைச் சுடும் என்பதுபோல வசமாக சிக்கி இருக்கிறார் ரிச்சர்டு ஷார்ப். அதாவது, இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு, 8 லட்சம் பவுண்டுகள் கடன் ஏற்பாடு செய்ததாக ரிச்சர்டு மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்த விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானது. அதாவது, 2020 இறுதியில் சாம் பிளைத் என்கிற கனடா நாட்டு பிரஜையிடம் இருந்து போரிஸ் ஜான்சனுக்கு 8 லட்சம் பவுண்டுகள் கடன் பெற்றுக் கொடுத்திருக்கிறார். இதற்கு பிரதிவுபகாரமாகவே போரிஸ் ஜான்சன் இவரை பிபிசி தலைவராக நியமித்திருக்கிறார். மேற்கண்ட விவரங்கள் அம்பலமானதால், ரிச்சர்டு தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

யோக்கியன் வர்றான் சொம்பைத் தூக்கி உள்ள வை என்கிற கதையாக, தன் மீது அழுக்கை வைத்துக் கொண்டு பாரத பிரதமர் மோடியைப் பற்றி குறை கூறி ஆவணப்படத்தை வெளியிட்டிருக்கிறார் ரிச்சர்டு…


Share it if you like it