இங்கிலாந்தில் ஹிந்துக்களுக்கு எதிரான முஸ்லீம்களின் தாக்குதல் தொடர்கதையாகி இருக்கிறது. கடந்த வாரம் லெய்செஸ்டரில் தாக்குதல் நடத்தியவர்கள், தற்போது பிர்மிங்ஹாமிலும் தாக்குதல் நடத்தத் தொடங்கி இருக்கிறார்கள்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான முதல் லீக் ஆட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே நடந்தது. இப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றது. இதனால் ஆத்திரமடைந்த இங்கிலாந்தில் வசிக்கும் பாகிஸ்தான் முஸ்லீம்கள், இந்திய முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர். குறிப்பாக, லெய்செஸ்டர் நகரில் இத்தாக்குதல் உச்சத்தில் இருந்தது. பாகிஸ்தான் முஸ்லீம்களுக்கு இந்தியா உள்ளிட்ட பிற நாட்டு முஸ்லீம்களும் ஆதரவாக இருந்தனர். இவர்கள் ஒன்று திரண்டு, ஹிந்துக் கோயில் மீது தாக்குதல் நடத்தியதோடு, கோயிலைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த காவி கொடிகளை பிடுங்கி எறிந்ததோடு, தீவைத்தும் கொளுத்தினர். மேலும், ஹிந்துக்களின் வீடு, கார்கள் ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்திய முஸ்லீம்கள், கண்ணில் பட்ட ஹிந்துக்களையும் தாக்கத் தவறவில்லை.
விடுமுறை நாளான கடந்த 17, 18-ம் தேதிகளில் முஸ்லீம்கள் வெறியாட்டம் ஆடினர். இதை கண்டித்து, 18-ம் தேதி மாலை ஹிந்துக்கள் அமைதிப் பேரணி நடத்தினர். இப்பேரணியையும் சீர்குலைக்கும் விதமாக கல்வீசி தாக்குதல் நடத்தினர் முஸ்லீம்கள். இந்த விவகாரம் இங்கிலாந்து மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இங்கிலாந்தில் இதுபோன்ற வன்முறை செயல்களில் ஈடுபட்டால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க சும்மா இருக்க மாட்டோம் என்று அந்நாட்டு மக்கள் ஆவேசமடைந்தனர். மேலும், இங்கிலாந்து அரசும் எச்சரிக்கை விடுத்தது. ஆனாலும், முஸ்லீம்கள் அடங்கவில்லை. மறுநாளே ஹிந்துக்களை வீண் வம்புக்கு இழுக்கும் வகையில், நடுரோட்டை மறுத்து, தொழுகை நடத்தினர். அப்போது, காரில் சென்ற ஹிந்துக்களை வழிமறித்து தாக்கினர். மேலும், கார்களையும் சேதப்படுத்தினர். இதனால், முஸ்லீம்களுக்கு பயந்துகொண்டு ஹிந்துக்கள் வீடுகளிலேயே முடங்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில்தான், லெய்செஸ்டரை தொடர்ந்து, பிர்மிங்ஹாம் நகரிலும் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறையில் முஸ்லீம்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். ஸ்மெக்மிக் பகுதியிலுள்ள துர்கா பவன் சென்டர் என்கிற ஹிந்து கோயிலுக்கு முன்பு நேற்று நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் ஒன்று திரண்டு அல்லாஹூ அக்பர் என்று கோஷமிட்டபடியே, கோயில் மீது கற்கள், பாட்டில்களை வீசினர். இதனால் பயந்துபோன ஹிந்துக்கள், கோயிலை பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீஸார், முஸ்லீம்களை அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர். இதன் பிறகே, நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது. முஸ்லீம்கள் மெஜிரிட்டியாகவும், ஹிந்துக்கள் மைனாரிட்டியாகவும் இருக்கும் இடங்களில் எல்லாம், முஸ்லீம்களால் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு வருவதாக இங்கிலாந்து பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.