தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழர், உலகின் தலைசிறந்த டாடா குழுமத்தின் தலைமைப் பொறுப்பில் அமர்ந்திருப்பதும் – நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பிறந்து – அரசுப் பள்ளிக்கூடத்தில் படித்து இந்தளவு முன்னேறி இருக்கிறார் என்பதும், தமிழ்நாட்டிற்கும் நமக்கும் மிகப்பெரிய பெருமையாக அமைந்திருக்கிறது.
அறிவாற்றலும் – திறமையும் இருந்தால் எத்தகைய உயரத்தையும் அடையலாம் என்பதற்கு இந்த மேடையில் அமர்ந்திருக்கும் என்.சந்திரசேகரன் அவர்களே சாட்சி” : ஒரகடத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்.
மாண்புமிகு முதல்வர் உண்மையை உரைத்தமைக்கு நன்றி. ஏதோ திரு.சந்திரசேகர் அவர்கள், திராவிட இயக்கத்தினாலும், கலைஞர் அவர்களால்தான் இந்த உயரிய பொறுப்புக்கு வந்திருக்கிறார் என்று சொல்லாதவரைக்கும் நல்லது. உங்கள் தந்தை பாஷையில் கூறவேண்டும் என்றால், அவர் ஒரு பார்ப்பனர். நாகரீகமா சொன்னால் பிராமணர். எந்தவித சலுகைகளும் இல்லாமல், தன்னுடைய உழைப்பினால் அரும்பாடுபட்டு, உலகத்தில் விரல்விட்டு என்னும் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் தலைமைப் பொறுப்பில் உயர்ந்திருக்கிறார்.
இங்கும் சிலபேர் உண்டு. ரயில் டிக்கெட் எடுக்க பணமில்லாமல், கழிவறையில் ஒளிந்துக்கொண்டு சென்னைக்கு வந்து, 40 ஆண்டுகளில் ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரர்களில் அந்த குடும்பமும் ஒன்று என்ற அளவிற்கு விஞ்ஞான ஊழல் புரிந்து, நாட்டின் வளங்களை சூறையாடிய நபர்களை, வரலாற்று நாயகர்களாக கொண்டாடும் அவல நிலை தமிழகத்தில்.
திரு சந்திரசேகர் தந்தை நடராஜ ஐயர். மோகனூரில் சாதாரணப்பட்ட நடுத்தர குடும்பம். மோகனூர் என்பது நாமக்கல்லில் இருந்து 30 KM தொலைவில் உள்ள ஒரு சிறிய கிராமம். காவிரிக்கரை. 40 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப்பார்ப்போம். என்னுடைய அத்தை வீட்டிற்கு அருகேதான் அவருடைய வீடு. நெருங்கிய குடும்ப நண்பர்கள். சிறுவயதில் விடுமுறைக்கு மோகனூர் செல்வது, காவிரியில் நீராடுவது, சக்கரை ஆலைக்கு செல்வது, நாவலடியான் கருப்பண்ணசாமி கோயிலுக்கு செல்வது, பசுமையான நினைவுகள். அப்படியாக திரு.சந்திரசேகர் அவர்களின் குடும்பமும் நெருங்கிய பழக்கம். அரசு பள்ளியில் தமிழ்வழியில் படித்து, திருச்சியில் இன்ஜினியரிங் படிப்பு, பின்பு மேல்படிப்பு என்று படிப்படியாக சொந்த முயற்சியால் முன்னேறியவர்.
தமிழக இளைஞர்கள் திரு.சந்திரசேகர் போன்றவர்களை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, வாழ்க்கையில் உழைக்க வேண்டும். திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். எங்கு படித்தாலும், எப்படிப்பட்ட தேர்வுகளையும், NEET உட்பட, நம்மால் சந்திக்க முடியும் என்ற தன்னம்பிக்கை வரவேண்டும். ஏதோ திரைப்பட போலி கதாநாயகர்களை கண்டு, திசைமாறி, கூத்தடித்து, கொண்டாடி, நேரத்தை விரையம் செய்வதில் எந்த பயனும் இல்லை. தேசத்தை உயர்த்தவேண்டும் என்று உண்மையாக உழைத்து, உயர்ந்த திரு.சந்திரசேகர் போன்ற சாதனையாளர்களை பின்பற்றுவோம். அவர்கள்தான் Real Heros.
திராவிடமாடல் என்று ஏமாந்தது போதும். இனி #தேசியமாடல் பின் அணிவகுப்போம்.
-ஆனந்த் ஸ்ரீனிவாசன்