விபத்துகளை ஏற்படுத்தும் நுழைவாயில் : அகற்ற உத்தரவிட்ட கோர்ட் !

விபத்துகளை ஏற்படுத்தும் நுழைவாயில் : அகற்ற உத்தரவிட்ட கோர்ட் !

Share it if you like it

மதுரையில் போக்குவரத்துக்கு இடையூறாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள நுழைவு வாயில் மற்றும் மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள நுழைவு வாயில் ஆகியவற்றை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மதுரை, பி.பி.குளத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜைனப் பீவி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “மதுரை டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே நக்கீரர் நுழைவு வாயில் எனும் பெயரில் பழமையான அலங்கார வளைவு கட்டப்பட்டுள்ளது.

இப்பகுதியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் நிலையில், அலங்கார வளைவு வழியாக மட்டுமின்றி அதன் ஓரங்களிலும் இடம் இருப்பதால், அதன் வழியாகவும் வாகனங்கள் முந்திச் செல்ல முயல்கின்றன. குறிப்பாக, இருசக்கர வாகனங்கள், ஷேர் ஆட்டோக்கள் போன்றவை முந்திச் செல்வதற்கு அலங்கார வளைவின் ஓரங்களைப் பயன்படுத்துவதால், ஏராளமான விபத்துக்கள் நிகழ்வதோடு, போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

எனவே, பழைய நக்கீரர் நுழைவு வாயிலை அகற்றி, அகலமான புதிய அலங்கார வளைவை அமைத்தால் வாகன ஓட்டிகளுக்கு எளிதாக அமைவதோடு, விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். ஆகவே, மதுரை டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே உள்ள நக்கீரர் நுழைவு வாயில் எனும் அலங்கார வளைவை பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் அகற்ற உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *