7 வயது சிறுமி பலாத்காரம்: அக்பர் அலிக்கு போக்ஸோ; அண்ணாமலைக்கு கடிதம்!

7 வயது சிறுமி பலாத்காரம்: அக்பர் அலிக்கு போக்ஸோ; அண்ணாமலைக்கு கடிதம்!

Share it if you like it

ஈரோடு அருகே 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அக்பர் அலியை போலீஸார் கைது செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்திருக்கின்றனர். 7 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டிருக்கும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர் அக்பர் அலி. 55 வயதாகும் இவர், அப்பகுதியிலுள்ள சைக்கிள் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 23-ம் தேதி, அதாவது தீபாவளிக்கு முதல்நாள், அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது, அச்சிறுமியை அழைத்த அக்பர் அலி, அருகிலுள்ள பெட்டிக் கடைக்கு அழைத்துச் சென்று தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்திருக்கிறார். பின்னர், அச்சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

தனக்கு என்ன நடந்தது என்பதை அறியாத அச்சிறுமி, அருகிலிருந்த கடையின் உரிமையாளர் பெண்ணிடம், தனது உடலில் சில இடங்களில் வலி இருப்பதாகக் கூறியிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். பின்னர், இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஈரோடு சைல்டு லைன் ஆலோசகர் ஜாஸ்மின் கிறிஸ்டியிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஜாஸ்மின் புகார் அளித்தார். இதன் பேரில், போலீஸ் எஸ்.ஐ. மேனகா வழக்குப் பதிவு செய்து, அக்பர் அலியை கைது செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தார்.

இச்சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இது தொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சிலர், ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்கள். அதில், “ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பகுதியில் 8 வயதே ஆன பெண் குழந்தைக்கு தீபாவளிக்கு முன்தினம் (23/10/2022) நடந்த பாலியல் வன்கொடுமை பற்றி பெற்றோருக்கு தெரிந்திருக்கிறது, ஊர் மக்களுக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால், காவல் துறைக்கோ, உளவுத்துறைக்கோ தெரியவில்லை. அதேபோல, அந்தத் துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் இந்த கொடுமை தெரியவில்லை.

மேலும், எங்கோ ஒரு மூலையில் நடந்தால் மெழுகுவர்த்தி ஏந்தி போராடும் திராவிடத்தின் மெழுகுவர்த்தி கனிமொழிக்கும் தெரியவில்லை. பெற்றவளோ காமக்கொடூரனின் மிரட்டலுக்கு பயந்து ஊமையாகி கண்ணீர் விட்டு கதறுகிறார் பாவம். அந்தக் குழந்தை அருகில் இருக்கும் ஒரு கடையின் பெண் உரிமையாளரிடம் தன்னுடைய உடம்பில் சில இடத்தில் வலி உள்ளது என்று கூறிய பின்புதான் இந்த கொடுமையே ஊர் மக்களுக்கு தெரிந்துள்ளது. அதாவது, இன்று வரை 18 நாள் ஆகிவிட்டது. இந்தக் குழந்தைக்கு “நியாயம் கிடைக்க” தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அந்த தாயின் “நெஞ்சுக்கு நீதி” கிடைக்க (உதயநிதி ஸ்டாலின்) என்ன செய்வது? முதல்வர் சென்னையில் இருக்கும்போதுதான் ஏழையின் குரலும், பெண்களின் கண்ணீரும் “எட்டாதோ”, அதேபோல் இன்று முதல்வர் குற்றம் நடைபெற்றுள்ள ஈரோட்டில் இருந்தாலும்கூட இக்குழந்தையின் வலியும் தாயின் அழுகையும் “எட்டாதோ”?” என்று கேள்வி எழுப்பி இருப்பதோடு, இந்த விவகாரத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலையிட்ட, பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நீதியும், நியாயமும் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.


Share it if you like it