பிரபல யூடியூபர் இர்ஃபான் தனது மனைவியின் கருவில் உள்ள பாலினத்தை சட்ட விரோதமாக அறிவித்துள்ளார். சிசுவின் பாலினத்தை வெளியே தெரிவிக்கக் கூடாது என்ற கடுமையான சட்டம் கூட இர்பான் முஸ்லிம் என்பதால் பாய மறுக்கிறது என்று குற்றச்சாட்டை வைத்துள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில்,
பிரியாணி மற்றும் ஹோட்டல்களை பற்றி கருத்து தெரிவிக்கும் பிரபலமான யூடியூபர் இர்ஃபான் அவர்கள் தனது மனைவியின் கருவில் உள்ள பாலினம் என்னவென்று தெரிவித்துள்ளார்.
ஆனால் அரசாங்க விதிகளின்படி அப்படி சொல்வது சட்டத்திற்கு புறம்பான செயலாகும். இந்த செய்தி அவரால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டது. சுகாதாரத்துறை இவர் செய்தது தவறு என சொன்ன செய்தி வெளியான பின்பு இவர் மீது கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
தற்போது இவர் இந்த செயலுக்காக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனரை சந்தித்து மன்னிப்பு கேட்டுள்ளார் . இதையும் தமிழக அரசின் சுகாதாரத்துறை ஒப்புக்கொண்டுள்ளது..
இதையே ஒரு பிரபலமான இந்து செய்திருந்தால் இந்நேரம் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கும். சிசுவின் பாலினத்தை வெளியே தெரிவிக்கக் கூடாது என்ற கடுமையான சட்டம் கூட இர்பான் முஸ்லிம் என்பதால் பாய மறுக்கிறது.
இத்தகைய பாரபட்சம் அடுத்தவர்களையும் இதே போல செய்ய தூண்டும் என்பதால் இர்பானின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்னனர்.