இன்று வேலூரில் பிரதமர் மோடி தேர்தலையொட்டி பிரச்சாரம் மேற்கொண்டார். வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, அரக்கோணம், ஆரணி 6 ஆகிய தொகுதிகளின் பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ”எனது அருமை சகோதர, சகோதரிகளே வணக்கம்” என தமிழில் பேசி பிரதமர் மோடி தனது உரையை துவக்கினார்.
வரவிற்கும் தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவித்தார். தமிழ் மக்களின் ஆசீர்வாதம் எப்போதும் எனக்கு உண்டு. தமிழகத்தின் வளர்ச்சிக்காக என்னை அர்ப்பணிக்கிறேன் என்று கூறினார்.
2014 க்கு முன்பு இந்தியாவில் வளர்ச்சி என்பதே இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் எங்கு பார்த்தாலும் ஊழல் ஊழல் ஒன்றுதான் கரை புரண்டு ஓடியிருந்தது. நாட்டின் வளர்ச்சிக்காக எந்தவொரு திட்டமும் காங்கிரஸோ தமிழநாட்டின் வளர்ச்சிக்காக திமுகவோ கொண்டு வரவில்லை. ஆனால் நான் பிரதமராக பதவி ஏற்றது முதல் இந்தியா பலமிக்க நாடாக மாறியுள்ளது. பொருளாதாரத்தில் 11 வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5 வது இடத்தில் உள்ளது. மூன்றாம் இடத்திற்கு முன்னேற தற்போது அதற்கான வேலைகள் நடைப்பெற்று கொண்டிருக்கிறது. வலிமையான இந்தியாவுக்கான அடித்தளத்தை கடந்த 10 ஆண்டுகால பா.ஜ., ஆட்சி அமைத்துள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு திமுக தடையாக உள்ளது. திமுக ஒரு குடும்ப கம்பெனியாக செயல்பட்டு வருகிறது.
உலகின் மிக தொன்மையான சிறப்பினை பெற்ற மொழி தமிழ். தமிழ் மொழியை நான் தினமும் கற்று வருகிறேன். திமுக காங்கிரஸ் ஆட்சியில்தான் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தனர். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களை பாஜக அரசு தான் காப்பாற்றி வந்தது. ஊழலின் ஒட்டுமொத்த உருவமாக திமுக உள்ளது. மக்கள் ஒற்றுமையாக இருந்தால் திமுகவை செல்லா காசாக்கிவிடுவார்கள் என பயந்து,ஜாதி, மதம், மொழி என மக்களிடையே பிரிவினை பேசி மக்களின் ஒற்றுமையை குலைத்து வருகின்றனர். பெண்களை இழிவு படுத்துவதில் திமுகவும் காங்கிரசும் முன்னிலையில் உள்ளனர். நீங்கள் என்டிஏ கூட்டணிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் நாட்டின் வளர்ச்சிக்கு அளிக்கும் ஓட்டாகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.