வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலுக்கு வருகை புரிந்து சங்கரநாராயணன் கோயில் தேரோட்ட திருவிழாவில் கலந்து கொண்டு அங்கு சாமி தரிசனம் செய்தார். பின்னர் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், நீங்கள் எதிர்பார்ப்பதை நீங்கள் சொல்லாமலேயே நாங்கள் செய்து வருகிறோம். தமிழக அரசிடம் பணம் இல்லை. ஆனாலும் மகளிர் உரிமைத் தொகையாக ரூ 1000 கொடுத்துவிட்டு நாங்கள் படாதபடுபடுகிறோம்.
அந்த உதவித் தொகை கிடைக்காத ஒரு சில பெண்கள் நாங்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு விழாக்களுக்கு சென்றால் எங்களை படுத்தும் பாட்டில் இருந்து தப்பித்து ஓடி வருவதே பெரும் பாடாக உள்ளது. இவ்வாறு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சர்ச்சைக்குரிய முறையில் பேசினார்.
திமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு தேர்தலில் ஜெயித்து ஆட்சிக்கு வந்த பிறகு தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டும்தான் ரூ.1000 என்று கூறுகிறார்கள். அதற்கு உரிமைத்தொகை என்று புதிய பெயரும் வைத்தனர். ஆனால் ஆட்சி அமைந்த உடன் உரிமைதொகை வழங்காமல் இழுத்தடித்து இடைத்தேர்தல் வந்த பிறகுதான் அதனையும் கொடுக்க ஆரம்பித்தனர். அந்த வகையில் தகுதி வாய்ந்த பெண்கள் பலருக்கே ரூ.1000 கிடைக்கவில்லை என்றால் அவர்கள் கோபப்படாமல் என்ன செய்வார்கள்.
இவ்வாறு சலித்துக்கொண்டு அந்த பணத்தை நீங்கள் கொடுக்க நினைத்தால் பிறகு எதற்காக நீங்கள் வாக்குறுதி கொடுக்கிறீர்கள்.
அந்த ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு பவுடர் கிரீம் போட்டு பாக்க பழபழப்பா இருக்கீங்க, ஆயிரம் ரூவா வந்துருச்சா என்று பெண்களை ஆபாசமாக பேசுவது.
மேலும் தேர்தல் பிரச்சாரத்தின் போது காதுல மூக்குல கழுத்துல போட்டுருக்குறது எல்லாம் பேங்க்ல வைங்க நம்ம ஆட்சிதான் வரபோது தள்ளுபடி பண்ணிடலாம். இவ்வாறு கூறிவிட்டு அதிலும் தகுதி வாய்ந்தவர்க்ளுக்கு மட்டும்தான் என்று கூறினர்.
இதுமட்டுமல்லாமல் திமுக தேர்தலுக்கு முன் அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.