காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள A2B என்று அழைக்கப்படும் அடையாறு ஆனந்தபவன் இனிப்பகத்தில் வாடிக்கைகையாளர் ஒருவர் இனிப்பு வாங்கியுள்ளார். இந்த நிலையில் அந்த இனிப்புகள் காலாவதி ஆகிவிட்டதாக கூறி வாடிக்கைகையாளர் A2B கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாடிக்கையாளர் கூறியதாவது : A2B நல்ல பிராண்ட் என்று தானே விளம்பரம் செய்றீங்க, அதை நம்பித்தானே மக்களும் நம்பி வாங்க வராங்க, அப்படி இருக்கும்போது நீங்க கெட்டு போன ஸ்வீட் குடுத்தா என்ன நியாயம். இந்த கெட்டு போன ஸ்வீட்டை எங்க குழந்தைகளுக்கு கொடுத்துருந்தா என்ன ஆகியிருக்கும். இவ்வாறு ஆதங்கத்துடன் பேசினார். இந்த காணொளியானது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக அடையாறு ஆனந்த பவனின் நிர்வாக இயக்குநர் கே.டி.சீனிவாச ராஜா ஒரு நேர்காணலின் காணொளியில், ஒரு காலத்தில், ஹோட்டல் தொழில் குறிப்பாக உணவகங்கள் குறிப்பாக சைவ உணவுகள் ஐயர்களால் நடத்தப்பட்டன, பின்னர் அது மாறத் தொடங்கியது, அதற்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியதற்கு சீனிவாச ராஜா, “யார் வேண்டுமானாலும் எதையும் செய்யலாம் – இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் தந்தை பெரியார். யார் வேண்டுமானாலும் எந்த வேலையும் செய்யலாம்/எந்த தொழிலையும் செய்யலாம். காலம் மாறுகிறது, ஒரு குறிப்பிட்ட சமூகம் செய்து வந்த ஒரு தொழில் இப்போது யாராலும், எல்லோராலும் செய்யப்படுகிறது. யார் வேண்டுமானாலும் கடலுக்குச் சென்று மீன் பிடிக்கலாம் ” என்று சர்ச்சைக்குரிய முறையில் பேசினார்.
இந்த காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஹிந்துக்கள் A2B கடையை புறக்கணிக்க தொடங்கினர். இதனால் A2B செல்லும் வாடிக்கையாளர் கூட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது. இந்தநிலையில் காலாவதியான இனிப்பகத்தை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/NewsTamilTV24x7/status/1829357031007957035