பிரபல திரைப்பட இயக்குனர் பேரரசு தமிழக அரசிற்கு தனது வேண்டுகோளை டுவிட்டரில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழில் அர்ச்சனைக்கு ஆலோசனை வரவேற்கத்தக்க ஆலோசனை!
இது தமிழ்ப்பற்றின் வெளிப்பாடு!
அதே நேரம் நம் அரசு இன்னொரு
ஆலோசனை நடத்த வேண்டும்!
பெரும்பாலான தனியார் பள்ளிகளில்
விருப்பப் பாடமாகத்தான் தமிழ்பாடம்
இருக்கிறது.
விருப்பப் பாடமாக இருப்பதற்கு தமிழ் விருந்தாளி மொழியல்ல, அது நம் தாய்மொழி!
அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும்.
இங்கே தமிழை அடமானம் வைத்து, கல்வி வியாபாரம் செய்யப்படுகிறது,
ஐந்தாவது, ஆறாவது படிக்கும் மாணவர்களுக்கு கூட தமிழ் தெரியாத
சூழ்நிலைதான் தற்பொழுது இருக்கிறது!
சாமிக்கு தமிழில் அர்ச்சனை அபிஷேக பாலாகும்.
பள்ளியில் தமிழ்ப்பாடம் குழந்தைக்கு தாய்ப்பால் ஆகும்!
தமிழக அரசு இதையும் ஆலோசனை செய்தால் நன்றாக இருக்கும் என்பது எம் தாழ்மையான விண்ணப்பம்!
தி.மு.க தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன் சென்னையில் சன்ஷைன் என்னும் பள்ளி கூடத்தை நடத்தி வருகிறார். ஸ்டாலின் குடும்பத்தினருக்கு சொந்தமான அப்பள்ளியில் ஹிந்தி, ஆங்கிலம், பயிற்று மொழியாக கற்பிக்கப்படுகிறது என்பதை இயக்குனர் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.