ஈ.வெ.ரா.வின் பிறந்த நாளை தி.க. மற்றும் தி.மு.க.வினர் கொண்டாடி வருகின்றனர். இச்சூழலில், ஈ.வெ.ரா.வின் மறுபக்கத்தை பிரபல எழுத்தாளர் கண்ணன் புட்டு புட்டு வைத்த காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
எழுத்தாளர், பேச்சாளர், ஆன்மீக சொற்பொழிவாளர் என பன்முகதன்மை கொண்டவர் ரங்கராஜ் பாண்டே. இவர், சாணக்கியா எனும் இணையதள ஊடகத்தை நடத்தி வருகிறார். இதனிடையே, பெரியார்? அம்பலமாகும் ஆதாரங்கள் எனும் தலைப்பில், பிரபல எழுத்தாளர் கண்ணனிடம் பாண்டே நேர்காணல் ஒன்றை நடத்தினார். அப்போது, கண்ணன் கூறியதாவது;
மைனர் வாழ்க்கை நடத்தியவன் நான். இதுநாள் வரை நான் மது அருந்தியது இல்லை. ஆனால், பலருக்கும் மது வாங்கி கொடுத்து இருக்கிறேன். நான், வியாபாரியாக இருந்த போது பல பொய்களை பேசி இருக்கிறேன். பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு நான் ஒரு பொய் கூட சொன்னது இல்லை. ஒழுக்ககேடான காரியத்தை நான் செய்தது இல்லை என ஈ.வெ.ரா. குறிப்பிட்டு இருக்கிறார்.
ஈ.வெ.ரா.வின் சுயசரிதையை எழுதிய சாமி சிதம்பரனார் இவ்வாறு குறிப்பிட்டு இருக்கிறார்;
ராமசாமி பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதற்கு முன்பு மிகப்பெரிய மைனராக விளங்கினார். அந்நாட்களில், பெரும்பாலும் விலை மாதர் இல்லங்களிலேயே புகுந்து புறப்படுவார். இதற்கு, ஏற்ற கூட்டாளிகள் பலர். நிலா காலங்களில் ராமசாமியும், அவரது கூட்டாளிகளும் விலைமாதர் கூட்டங்களுடன் காவிரி ஆற்று மணலுக்கு செல்வார்.
இரவு முழுவதும் ஆற்று மணலில் கூத்து அடித்து விட்டு, விடியற்காலை தான் வீட்டிற்கு திரும்புவார். இக்கூட்டத்திற்கு, ஈ.வெ.ரா. வீட்டில் இருந்துதான் சாப்பாடு கொண்டு செல்லப்படும். சாப்பாடு செல்லும் தகவல் தாய் தந்தையருக்கு தெரிய கூடாது. ஈ.வெ.ரா. இச்சமயம், நாகம்மையாரின் உதவியையே நாடுவார். நாகம்மையும் யாரும் அறியாத வண்ணம் கணவர் விரும்பும் உணவுகளை சமைத்து அனுப்பி வைப்பார். அவ்வுணவுகள் வீட்டின் பின்புறம் வழியாக வண்டியேறி காவேரி ஆற்றுக்கு போய்விடும் என குறிப்பிட்டு இருக்கிறார்.
கட்டிய மனைவிக்கு துரோகம் செய்து விட்டு, காவேரி ஆற்றில் லூட்டி அடித்த தலைவர் தான் சமூகநீதி, பெண் விடுதலை, பெண்கள் உரிமை என ஊர் முழுக்க பிரச்சாரம் செய்து இருக்கிறார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, ஈ.வெ.ரா.வின் பிறந்தநாளை முன்னிட்டு, எங்கே விழுந்தாய் என்று பார்க்க வேண்டியதில்லை, எங்கே வழுக்கியது என்று பார்க்க வேண்டும் என பெரியார் கூறியதாக பொன்மொழி ஒன்றை புதிய தலைமுறை வெளியிட்டு இருக்கிறது. ஆனால், அது ஹென்றி வார்டு பீச்சர் என்பவருடைய பொன்மொழி என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.