தேசிய கொடியை அவமித்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவிற்கு குவிந்து வரும் கண்டனங்கள்.
தேசிய மாநாட்டு கட்சியின் தலைவராக இருப்பவர் ஃபரூக் அப்துல்லா. இவர், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர், மத்திய அமைச்சர் என பல உயரிய பொறுப்புகளை வகித்தவர். ஆனாலும், இவரது பேச்சுக்கள் அனைத்தும் இந்தியாவிற்கு எதிராகவும் பாகிஸ்தானிற்கு ஆதரவாகவே இன்று வரை இருந்து வருகிறது. குறிப்பாக, இவர் முதல்வராக இருந்த காலத்தில் கிறிஸ்தவர்கள், ஹிந்து பண்டிட்கள் மற்றும் சீக்கியர்கள் அனுபவித்த கொடுமைகள், துயரங்கள் ஏராளம். அந்தவகையில், பலர் காஷ்மீர் மாநிலத்தை விட்டு வெளியேறும் அவல நிலை ஏற்பட்டது.
இப்படிப்பட்ட சூழலில் தான், காஷ்மீர் மாநில மக்களுக்கு ஒரு விடிவு காலத்தினை ஏற்படுத்தி கொடுக்கும் விதமாக மத்திய அரசு கொண்டு வந்தது தான் 370-வது சட்ட பிரிவு நீக்கம். பாரதப் பிரதமராக மோடி பத்து முறை வந்தாலும் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை நீக்க முடியாது என்று முழங்கியவர் பரூக் அப்துல்லா. ஆனால், இரண்டாவது முறையாக மோடி பதவி ஏற்ற பின் காஷ்மீர் மாநில மக்களுக்கு விடிவு காலத்தை ஏற்படுத்தி கொடுத்த கட்சி பா.ஜ.க. இதுதவிர, சவால் விட்ட பரூக் அப்துல்லாவின் முகத்தில் கரியை பூசியவர்கள் மோடி அமித்ஷா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான், நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கொண்டாடும் விதமாக அனைவரது வீடுகளிலும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி தேசிய கொடியை ஏற்றிட வேண்டும் என பாரதப் பிரதமர் மோடி தனது எண்ணத்தை தெரிவித்து இருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில், ஸ்ரீநகர் மார்கெட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்த பரூக் அப்துல்லா கூறியதாதவது;
பத்திரிகையாளர்; ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி இதை எப்படி பார்க்கிறீர்கள்?
ஃபரூக் அப்துல்லா; தேசிய கொடியை உங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள் என திமிருடன் பேசி விட்டு தனது காரில் ஏறி சென்று இருக்கிறார்.
இதேபோல, தி.மு.க தலைவர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த சமயத்தில் தேசிய கொடிக்கு உரிய மரியாதையை கொடுக்காமல் பரூக் அப்துல்லா போன்று திமிருடன் நடந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.