மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் செமினார் ஹாலில் இருந்து பயிற்சி மருத்துவர் ஒருவரின் உடல் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கொல்கத்தாவில் போக்குவரத்து காவல் தன்னார்வலராக பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இதனிடையே, படுகொலை செய்யப்பட்ட மாணவியின் பெற்றோர் உட்பட பல்வேறு தரப்பினர் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனக் கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டிஎஸ் சிவஞானம் நீதிபதி ஹிரன்மே பட்டாச்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
இந்நிலையில் கற்பழித்து படுகொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு தமிழக மருத்துவர்கள் 24 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அத்தியாவசியமான மருத்துவ சேவைகள் மற்றும் அவசர சிகிச்சை தவிர மற்ற எந்த சேவையும் நாளை காலை 6 மணி வரை செயல்படாது என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் நடந்த இந்த சம்பவத்திற்கு பாஜக நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து மம்தா பானர்ஜியை பதவி விலகுமாறு வலியுறுத்தி வருகின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால் நடவடிக்கை எடுக்க வேண்டிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியே இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
சமூக நீதி பெண்ணியம் பேசும் திமுக அமைச்சர் கனிமொழி எக்ஸ் பதிவில் இந்த விவகாரம் தொடர்பாக பதிவு ஒன்றை பதிவிட்டு அடுத்த வேலை பார்க்க சென்றுவிட்டார். இண்டி கூட்டணியில் இருக்கும் மம்தா பானர்ஜி ஆட்சி நடத்தி வரும் மாநிலத்தில் நடந்துள்ளதால் திமுக அரசோ அல்லது காங்கிரஸ், கம்யூனிஸ்ட் அரசோ எதிர்ப்பு கூட தெரிவிக்காமல் கூட்டணி கட்சியை காப்பாற்றி வருகின்றனர்.