திரவுபதி, ருத்ர தாண்டவம், பகாசுரன் போன்ற தமிழ் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனரான மோகன் G என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை கைது செய்து எங்கு வைத்துள்ளனரும் என்றும் தெரியவில்லை என்று பாஜக நிர்வாகியும் வழக்கறிஞருமான அசுவத்தாமன் அவர்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில்,
சினிமா இயக்குனர் நண்பர் திரௌபதி மோகன் G
அவர்கள் சற்று முன் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
என்ன காரணம், எந்த வழக்கு என்று எந்த முறைப்படியான தகவலும் குடும்பத்தினருக்கு கூறப்படவில்லை. இது உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிரானது. அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் இல்லை.
திமுகவினுடைய ஆட்சி அமைந்ததிலிருந்து எதிர்கருத்து பேசுபவர்கள் சட்டத்திற்கு புறம்பான முறையில் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது.
கஞ்சா கள்ளச்சாரயத்தை கட்டுப்படுத்த முடியாத திராவிட மாடலின் காவல்துறை இதுமாதிரியான ஒடுக்குமுறைகளை மட்டும் சரியாக செய்கிறது. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.