ஆடுகளம் திரைப்பட இயக்குனரை பேரரசு வெளுத்து வாங்கிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஆடுகளம் பட இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டார். அப்போது, அவர் இவ்வாறு பேசினார் ; திராவிட சித்தாந்தம் தமிழ் சினிமாவை கையில் எடுத்த விளைவு தான், தமிழ்நாடு இன்று வரை மதசார்பற்ற மாநிலமாக இருந்து வருகிறது. நடுவில் இடைப்பட்ட காலத்தில் கொஞ்சம் இல்லாமல் இருந்தது. இப்போது, திராவிட சித்தாந்தம் தமிழ் சினிமாவை கையில் எடுத்துள்ளது.
மக்களுக்காக தான் கலை மக்களை பிரதிபலிப்பது தான் கலை. இந்த கலையை சரியாக இன்று நாம் கையாள வேண்டும். இந்த கலையை சரியாக கொண்டு செல்ல வேண்டும். இல்லாவிடில், வெகு விரைவில் நம்மிடமிருந்து பல அடையாளங்களை எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில், வள்ளுவருக்கு காவி உடை அணிவது ஆகட்டும். ராஜ ராஜ சோழன் ஒரு ஹிந்து அரசனாக காட்ட முயற்சி நடைபெறுகிறது என்று கூறியிருந்தார்.
வெற்றி மாறனின் கருத்து ஹிந்துக்கள் மத்தியில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. விடியல் ஆட்சியில் நடக்கும் அவலங்கள் குறித்து பேச துணிவில்லை. எப்போது, பார்த்தாலும் ஹிந்து மதம் குறித்து விமர்சனம் செய்வதே இவர்களுக்கு வேலையாக போய்விட்டது என நெட்டிசன்கள் தங்களது கோவத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில், பிரபல திரைப்பட இயக்குனர் பேரரசு பத்திரிகையாளர்களை சந்தித்த போது இவ்வாறு பேசினார் ; சாமி கும்பிடும் அனைவரும் சிவன், பெருமாள், கிருஷ்ணன் என்று அனைத்து கடவுளையும் ஒன்றாக கருதி வழிபடுகிறான். இறை நம்பிக்கையில்லாத நபர்களுக்கு என்ன பிரச்சனை. உனக்கு சாமி கும்பிட பிடிக்கவில்லை. நீ ஹிந்து இல்லையே உனக்கு என்ன கவலை. இறை நம்பிக்கை மற்றும் தெய்வத்தை வணங்குபவன் அதுகுறித்து பேச வேண்டும். அவன்தான் அனைத்து மதங்களும், எல்லா தெய்வமும் ஒன்று என கருதி வழிபட்டு சென்று கொண்டு இருக்கிறான். நாத்திகம் பேசுபவன் ஹிந்து இல்லை என்றால், முதலில் நீ மனுஷனே இல்லையே எவன், பிறரின் மதத்தை புண்படுத்துகிறானோ அவன் முதலில் மனுஷனே இல்லை என ஆவேசமாக பேசியிருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.