தமிழக நிதியமைச்சர் பழனிவேல் ராஜன். அண்மையில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்பொழுது நடந்த விவாதத்தில் கோவா ஒரு சிறிய மாநிலமாக இருப்பதால், அதன் கருத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடாது என்கிற வகையில் பேசியுள்ளார்.
அக்கூட்டத்தில் கலந்து கொண்ட கோவாவின் போக்குவரத்து துறை அமைச்சர். பழனிவேல் ராஜன் கருத்திற்கு கடும் எதிர்ப்பினையும் கோவா மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இதற்கு பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பழனிவேல் தியாகராஜனுக்கு தனது எண்ணத்தை இவ்வாறு வெளிப்படுத்தி இருந்தார்.
ஜி.எஸ்.டி கூட்டத்தில் நிதியமைச்சர் பி.டி.ஆர் தியாகராஜன் அவர்களின் செயல்பாடுகள் ஜனநாயகத்திற்கு அவப்பெயர். நம் மாநிலத்தின் மதிப்பையும் குறைக்கிறது. தமிழகத்தின் தேவைக்காக கோவா போக்குவரத்து அமைச்சரை விமர்சனம் செய்வது. எந்த பிரயோஜனமும் இல்லை. தியாகராஜன் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த விமர்சனங்களை தாங்கி கொள்ள முடியாமல். நிதியமைச்சர் பா.ஜ.க எம்.எல்.ஏ-வை கடுமையாக விமர்சனம் செய்து விட்டு. அவரை பிளாக் செய்து உள்ளார். ஒரு எம்.எல்.ஏ எழுப்பிய கேள்விக்கே டுவிட்டரில் தடை செய்யும் நிதியமைச்சர்.
நாளை சட்டசபையில் எதிர்க்கட்சிகள் வரிசையாக கேள்வி எழுப்பும் பொழுது நிதியமைச்சர் என்ன செய்வார். தமிழக முதல்வருக்கு தொடர்ந்து அவமானத்தை ஏற்படுத்தி தரும் அமைச்சர்களை ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
The behaviour of @ptrmadurai in the GST council meeting is an insult to our democracy and tarnishes the image of our great state.
Verbally abusing Goa’s tran. minister does nothing to advance TN’s interests. @ptrmadurai should apologise.https://t.co/nHLDmQX8ci
— Vanathi Srinivasan (@VanathiBJP) May 30, 2021