கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நிர்மலா சீதாராமன் மீண்டும் மத்திய நிதி அமைச்சராக இரண்டாவது முறை பதவி ஏற்று கொண்டார். இதனால் இண்டி கூட்டணியில் உள்ளவர்கள் கதறி வருகின்றனர். இந்நிலையில் உலக வங்கி கருத்துக்கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கும் என உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
கடந்த பாஜக ஆட்சியில் நிர்மலா சீதாராமன் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா பொருளாதார பட்டியலில் 11-வது இடத்தில் இருந்தது.
2021-ம் ஆண்டின் பொருளாதார நாடுகளின் பட்டியலில் 6-வது இடத்தில் இருந்த இந்தியா, பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி 5-வது இடத்துக்கு முன்னேறியது. மீண்டும் பிரதமராக மோடி வந்தால் இந்திய பொருளாதாரத்தை 3-வது இடத்திற்கு கொண்டு வருவதாக பிரதமர் மோடி வாக்குறுதி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் மீண்டும் பிரதமராக மோடி பொறுப்பேற்று கொண்ட நிலையில் இந்தியா 3-வது இடத்திற்கு முன்னேறும் என்பது உறுதி ஆகியுள்ளது.