விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் திமுக கட்சி ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் விதிமுறைகளை மீறி பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளுங்கட்சி என்பதால் காவல்துறை அதிகாரிகளும் அங்கு நாடாகும் சம்பவங்களை பார்த்தும் பார்க்காதது போல் இருக்கின்றனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என அறிவித்ததால் மும்முனைப் போட்டி நிலவுகிறது. சுயேச்சைகள் உள்பட 29 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் என மும்முனைப் போட்டி நிலவுகிறது. 3 கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தேர்தல் விதிமுறைகளை மீறி விக்கிரவாண்டி தொகுதி, ஆசாரங்குப்பம் கிராமத்தில் திமுகவினர் ஓட்டுக்கு வேஷ்டி சேலை வழங்கினர். இதனை பாமகவினர் தடுத்து நிறுத்தி அவர்கள் கொடுக்க வைத்திருந்த வேஷ்டி சேலைகளை பிடுங்கி ரோட்டில் எறிந்துள்ளனர். இதுதொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இதனை தொடர்ந்து திருத்தணி திமுக எம்எல்ஏ சந்திரன் விக்ரவாண்டி தொகுதியில் உள்ள பெண்களை ஒரு வீட்டில் சந்தித்து அவர்களை மூளைசலவை செய்து திமுக வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வாங்கி தருகிறேன் என்றும் அது செய்கிறேன் இது செய்கிறேன் என்று வாக்குறுதிகளை எல்லாம் அள்ளிவிட்டார். மேலும் நம்ம தொகுதியில் வன்னியர் தான் எல்எல்ஏ ஆகணும்.வேற யாரும் ஆக கூடாது. அதனால் தான் முதல்வர் ஸ்டாலின் வன்னியரை தேர்தலில் நிறுத்தியுள்ளார். இவ்வாறு திமுக எம்எல்ஏ சந்திரன் பேசும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலானது.
தற்போது அந்த தொகுதியில் உள்ள இஸ்லாமிய வாக்காளர்களுக்கு திமுக பிரமுகரும் நடிகருமான சென்னையைச் சேர்ந்த பஷீர் என்பவர் பணம் வழங்கி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கு ஓட்டு சேகரிக்கும் வீடீயோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அடுத்த வாரம் தேர்தல் நடக்க உள்ள நிலையில் திமுக இவ்வாறு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வேஷ்டி சேலைகளை கொடுப்பது, பெண் வாக்காளர்களை ஒன்றுதிரட்டி மூளைச்சலவை செய்து வாக்கு சேகரிப்பது, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது என தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமா என நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.