உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதா் கோவில் அமைந்துள்ளது. இதன் அருகே ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி, முகலாய அரசா் ஒளரங்கசீப் காலத்தில் காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டுக் கட்டப்பட்டது என இந்துக்கள் கூறி வருகின்றனர். இது தொடர்பாக, இந்து மதத்தைச் சேர்ந்த 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இஸ்லாம் அமைப்புகள் சார்பிலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மசூதியில் ஆய்வு நடத்த உத்தரவிட்டது. இதனையடுத்து வாரணாசி நீதிமன்றத்தில் தொல்லியல் துறையின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், வாரணாசி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை எதிர்த்து, ஞானவாபி மசூதி கமிட்டி மற்றும் உத்தரப்பிரதேச சன்னி மத்திய வக்ஃப் வாரியம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஐந்து வழக்குகளை அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வாரணாசி நீதிமன்றம் 6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.