தி.மு.க வெற்றி பெற்றது நாங்கள் போட்ட பிச்சை என்று சமீபத்தில் ஜார்ஜ் பொன்னையா என்கிற மதவெறி பிடித்த கிறிஸ்தவ பாதிரியார் பேசியது கடும் சர்ச்சையானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு தற்பொழுது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவ்விவகாரம் கடும் விவாத பொருளாக மாறியுள்ள இந்நிலையில், ஜமாத்தில் இமாம்கள் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் காரணமாகவே 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றது என்று பொதுக்கூட்டம் ஒன்றில் இஸ்லாமிய மதபோதகர் ஒருவர் பேசியுள்ளார் மேலும் அவர் அக்காணொளியில் இவ்வாறு கூறியுள்ளார்.
“இஸ்லாமியர்கள் பொது மேடையில் பேசுவதை கவனிப்பார்கள் ஆனால் செயல்படுத்த மாட்டார்கள். ஆனால் வெள்ளிக்கிழமை பள்ளிவாசலில் ஜும்மா மேடையில் சொல்லப்பட்டால் கண்டிப்பாக அதுசெயல்படுத்தப்படும்.
இதற்கு உதாரணம் என்னவென்றால் பல மாநிலங்களில் ஜும்மாவில் இமாம்கள் பேசவில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஜும்மாவில் இமாம்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்று பேசினார்கள்.
இதனால் நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலில் ஒரு தீர்ப்பு வந்த பொழுது தமிழகத்தில் மட்டும் வேறு தீர்ப்பு வந்தது. ஜும்மாவின் இமாம்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் யாரை புறக்கணிக்க வேண்டும் என்றும் பேசியதன் விளைவாகவே இவ்வாறு ஒரு தீர்ப்பு கிடைத்தது என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தா சொல்லிட்டார் உங்க தேர்தல் வெற்றியின் ரகசியத்தை.
மத அரசியல் பண்ணுவது யார்னு தெளிவா புரியும் pic.twitter.com/502hfLVrof
— மு.தமிழ்செல்வன் (@Mu_Tamilselvan) July 28, 2021