கருணாநிதி கொடுத்த வீட்டு மனை பட்டா : சல்லிக்காசுக்கு கூட பிரயோஜனமில்லை – மக்கள் வேதனை !

கருணாநிதி கொடுத்த வீட்டு மனை பட்டா : சல்லிக்காசுக்கு கூட பிரயோஜனமில்லை – மக்கள் வேதனை !

Share it if you like it

குடியாத்தம் கொண்ட சமுத்திரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர், 24 வருடங்கள் முன் அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி தங்களுக்கு வழங்கிய இலவச வீட்டுமனை பட்டாவை அடங்கலில் ஏற்றி தரக்கூறி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

கடந்த 2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மோர்தானா அணை திறப்பு விழாவிற்கு வருகை தந்த அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி 32 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார். அந்தப் பட்டாவானது அந்த மக்களுக்கு இதுவரை எந்த வகையிலும் பயன்படாமல் இருக்கிறது. அதை வைத்து ஒரு கல்விக் கடன் வாங்க வேண்டும் என்றாலும், சிறு தொழில் மேற்கொள்வதற்கு கூட வங்கியில் கடன் பெற முடியாமல் அவதியடைவதாக மக்கள் கூறுகின்றனர்.

வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாவை ஆன்லைனில் அடங்கலில் ஏற்ற வேண்டும் என்பது தற்போது விதியாக இருக்கிறது. ஆனால் இந்த மக்களுக்கு 24 வருடங்கள் கடந்தும் அவர்களுக்கு இந்த பட்டாவை அங்கீகரிக்க முடியாமல், அடங்கல் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து அவர்கள் கூறும் பொழுது, “எங்களுடைய சொத்தை எங்களுடைய வாரிசுகளுக்கு நாங்கள் எழுதி வைப்பது கூட இந்த பட்டா பயன்படவில்லை. அடங்கல் இருந்தால் மட்டுமே பட்டா மாற்றம் செய்யப்பட முடியும். நிறைய பேர் இறந்து போய் உள்ளனர். இறந்தவர்களின் சொத்து அவர்களின் வாரிசுக்கு மாற்ற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக பலமுறை மனு அளித்து விட்டோம். எந்த அதிகாரியும் எங்களுக்கு முறையாக பதில் அளிக்கவில்லை. எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பட்டாவில் சொந்தமான இடத்தை அளந்து அதை அடங்கலில் ஏற்றி தர வேண்டியது அதிகாரிகள்.

ஆனால் அவர்களிடம் சென்று கேட்டால், மாவட்ட ஆட்சியர் தரவேண்டிய உத்தரவு. எங்களுக்கு இன்னும் வந்து சேரவில்லை என்று கூறுகின்றனர். இந்த இலவச வீட்டுமனை பட்டாவை நாங்கள் வாங்கி 24 வருடங்கள் ஆகிறது. ஆனால் இன்று வரை இந்த பட்டா எங்களுக்கு பயனளிக்கவில்லை” என்று வேதனை தெரிவித்தனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *