“ஜெயலலிதாவின் மரணத்தில் தனக்கு சந்தேகம் உள்ளது. நான் ஆட்சிக்கு வந்தால் தீவிர விசாரணையை மேற்கொள்வேன் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் கருத்து கூறி வருகிறார். இந்நிலையில் தி.மு.க மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் எம்.பியுமான கே. பி ராமலிங்கம்., கருணாநிதி மரணத்தில் தனக்கு சில சந்தேகங்கள் உள்ளன எனவும். ஸ்டாலின் எவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரானார் என்பதையும், டெல்லியில் எனக்கு முன்னால் அவர் என்ன செய்தார் என்பதையும் நான் மக்களுக்கு விரைவில் சொல்வேன். ஸ்டாலின் தனது தந்தையை தவிர்த்து வந்தார். “ஸ்டாலினுக்கு ரூ .2,000 கோடி சொத்துக்கள் உள்ளது என்று ராமலிங்கம் கூறி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.