அஇஅதிமுக அம்மா பேரவை திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் புலவர். திரு. ரமேஷ் மற்றும் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்து மக்கள் பணியில் சிறந்து விளங்கும் வி.கே.சின்னசாமி அவர்களும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். இதுதொடர்பாக அண்ணாமலை எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
அஇஅதிமுக அம்மா பேரவை திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் புலவர். திரு. ரமேஷ் (குட்லக் ரமேஷ்) அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சித் திறனாலும், தலைமைப் பண்புகளாலும் ஈர்க்கப்பட்டு, தமிழக பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
திரு ரமேஷ் அவர்களை மகிழ்வுடன் வரவேற்று, தனது சீரிய அரசியல் அனுபவம் மற்றும் மக்கள் சேவை மூலம் தமிழக அரசியலில் பொதுமக்கள் விரும்பும் நேர்மையான அரசியல் மாற்றத்தை உருவாக்கும் வண்ணம், உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மறைந்த புரட்சித்தலைவர் அமரர் எம்ஜிஆர் அவர்கள், முதன்முதலில் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற 1977 ஆம் ஆண்டில் இருந்து, நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும், மக்களின் தொடர் நம்பிக்கையைப் பெற்று மக்கள் பணியில் சிறந்து விளங்கும் ஐயா திரு வி.கே.சின்னசாமி அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தலைமைப் பண்பினாலும், நல்லாட்சித் திறனாலும் ஈர்க்கப்பட்டு, பாஜகவில் தம்மை இணைத்துக்கொண்டார்.
ஐயா திரு வி.கே.சின்னசாமி அவர்களை வரவேற்று மகிழ்வதோடு, அவரது அனுபவமும், மக்கள் பணிகளும்,
தமிழக பாஜகக்கு மேலும் வலுசேர்க்கும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்திக் கொள்கிறேன்.