அரசு அதிகாரிகளின் பெயரில் போலி ID-களை உருவாக்கி மோசடி – போலீசார் எச்சரிக்கை !

அரசு அதிகாரிகளின் பெயரில் போலி ID-களை உருவாக்கி மோசடி – போலீசார் எச்சரிக்கை !

Share it if you like it

சைபர் க்ரைம் குற்றவாளிகள் Face book, Twitter, whats app போன்ற சமூக வலைதளங்களில் அரசு உயர் அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் போன்ற ஐடிகளை உருவாக்குகின்றனர், பின்னர் அந்த அதிகாரிகளின் கீழ் பணியாற்றி வரக்கூடிய ஊழியர்கள் மற்றும் நண்பர்களுக்கு ‘உடனடியாக மருத்துவ செலவு மற்றும் அவசர தேவைகளுக்கு பணம் தேவை’ எனக்கூறி மெசேஜ் அனுப்புகின்றனர்.

தங்களது உயர் அதிகாரிகள் பணம் கேட்பதால் தீர விசாரிக்காமல் நம்பி அந்த ஊழியர்களும் பணத்தை அனுப்பிவிடுகின்றனர். பின்னர் நேரடியாக கேட்ட பின்பே அது மோசடி நபர் என்பது தெரியவருகிறது. இது தொடர்கதையாகி சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்ற ஒரு மோசடியில், கடந்த ஆறு மாதத்தில் மட்டும் தேசிய சைபர் கிரைம் இணையதளத்தில் மொத்தம் 1376 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தமிழக சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனால் இந்த மோசடியில் இருந்து விடுபட சம்பந்தப்பட்ட நபருடன் நேரடியாக சென்று பார்க்கவும் அல்லது தெரிந்த மின்னஞ்சல் முகவரிகள் அல்லது அதிகாரப் பூர்வ தொலைபேசி எண்கள் மூலம் நம்பகமான தொடர்பு தகவலை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக கடவுச் சொற்களை புதுப்பிக்கவும் இது போன்ற மோசடிகள் குறித்து முன்னதாக பொதுமக்கள் அறிந்து வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது போன்ற மோசடியில் சிக்கினால் பொதுமக்கள் உடனடியாக 1930 என்ற சைபர் க்ரைம் எண்ணிற்கு புகார் அளிக்க வேண்டும் என தமிழக சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.


Share it if you like it