சேவாபாரதி தமிழ்நாடு, அமைப்பானது L&T நிறுவனத்துடன் இணைந்து இலவசமாக திறன் மேம்பாட்டுப் பயிற்சியை காஞ்சிபுரம் மற்றும் அத்திப்பள்ளி (ஓசூர் அருகில்) ஆகிய இடங்களில், ஒன்றரை முதல் மூன்று மாத காலத்தில் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சேவாபாரதி தமிழ்நாடு மாநில பொது செயலாளர் வே.நிர்மல்குமார் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :-
சேவாபாரதி தமிழ்நாடு, பஞ்சகார்யா என்ற திட்டத்தின் கீழ் கல்வி, மருத்துவம், சமுதாய நலன், சுய சார்பு மற்றும் பேரிடர் மேலாண்மை என்ற ஐந்து துறைகளின் கீழ், மக்களுக்கு பல்வேறு வகையான சேவைப் பணிகளைச் செய்து வருகிறது.
நாட்டின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான L&T, நாடு முழுவதும் பல்வேறு வகையான உலகத் தரம் வாய்ந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளைப் பல இடங்களில் இலவசமாக நடத்தி வருகிறது.
அவையாவன:
தச்சு வேலை மற்றும் சாரம் அமைக்கும் வேலை (Formwork Carpentry), நவீன கட்டு மற்றும் பூச்சு வேலை (Advanced Masonry), (Bar Bending & Steel Fixing), கட்டுமான மின்னியல் பணியாளர் (Electrician / Wireman), குழாய் பற்றவைத்தல் (TIG & ARC Welding), குழாய் பொருத்துனர் மற்றும் செப்பனிடுபவர் (Pipe Fitter & Plumber), சாரம் அமைக்கும் வேலை (Scaffolding), प / (Wet Plant Operator).
சேவாபாரதி தமிழ்நாடு, இந்த அரிய வாய்ப்பை, பல்வேறு தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் L&T நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, இந்தத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை காஞ்சிபுரம் மற்றும் அத்திப்பள்ளி (ஓசூர் அருகில்) ஆகிய இடங்களில், ஒன்றரை முதல் மூன்று மாத காலத்தில் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்குத் தேவையான கல்வித் தகுதி எட்டாவது வகுப்பு முதல் ITI
இந்தப்பயிற்சியின் சிறப்பம்சங்களாவன: ஒரே நேரத்தில் 2000 நபர்களுக்குப் பயிற்சி அளிக்கக் கூடிய அளவுக்குப் பரந்த இட வசதி, உலகத் தரம் வாய்ந்த பயிற்சி, இலவச சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள், உணவு மற்றும் தங்குமிடம் இலவசம், தேவைக்கேற்ற கணினிப் பயிற்சி, பயிற்சி முடித்தபின், L&T நிறுவனத்தின் சான்றிதழ், அரசுத் தேர்வாளர்களைக் கொண்டு தேர்வு நடத்தி, அரசுத் தொழிற்பயிற்சிச் சான்றிதழ் மற்றும் பயிற்சி முடிந்தவுடன் L&T நிறுவனத்தின் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் வேலை
வாய்ப்பு. முன்பதிவு செய்ய அணுகவும்: அலைபேசி 7305087892 [email protected]
பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள அன்புடன் அழைக்கின்றோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Very Useful Skill Devalopement Planning
Thanking You